இந்தியாவில் கொரோனா பரவல் நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டும் வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மே ஒன்றாம் தேதியிலிருந்து, 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், இந்தியாவில் தற்போது கோவாக்சின் (Covaxin), கோவிஷீல்டு (Covoshield) ஆகிய இரு தடுப்பூசி மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதை தயாரிக்கும் நிறுவனங்கள், மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கான விலைகளை அதிகரித்துள்ளன. 


அதன்படி, கோவாக்ஸின் மருந்தை, தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம், கோவாக்சின் (Covaxin) தடுப்பூசி மாநிலங்களுக்கு ரூ.600 என்ற விலையிலும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,200  என்ற விலையிலும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 


ALSO READ | Covishield, Covaxin: கோவிஷீல்ட், கோவேக்ஸின் தடுப்பூசி விலைகள் அதிகரிப்பு


அதே போன்று, கோவிஷீல்டு தடுப்பூசி மாநிலங்களுக்கு 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 விலையில் வழங்கப்படும் என  சீரம் நிறுவனம் (Serum Institute of India) அறிவித்தது. அதேநேரம் மத்திய அரசுக்கு ரூ.150 என்ற விலையிலேயே இரு தடுப்பூசிகளும் வழங்கப்படும் எனவும் இந்த நிறுவனங்கள் அறிவித்தன.
இந்த விலை உயர்வுக்கு, நாடு முழுவதும் எதிர்ப்பு அலைகள் ஏற்படுள்ள நிலையில், தடுப்பூசியின் விலையை குறைக்குமாறு சீரம் (SII) , பாரத் பயேடெக் (Bharat Biotech) ஆகிய மருந்து நிறுவனங்களையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.


இதை அடுத்து, தடுப்பூசியின் விலையை குறைக்க நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதிய விலை நிர்ணயிக்கப்பட்டு, அவர்கள் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள், தங்களது 50 சதவீத உற்பத்தியை மத்திய அரசுக்கும், மீதமுள்ள 50 சதவீதத்தை மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவ மனைகளுக்கு வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


ALSO READ | ஆக்ஸிஜன் உபகரணங்கள் இறக்குமதி மீதான வரிகள் நீக்கம்: மத்திய அரசு அறிவிப்பு


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR