நாம் நம் வாழ்க்கையில் பல முக்கியமான விஷயங்களை கவனிக்காமல் விட்டுவிட்டோம். அப்படி ஒன்றுதான் நமது பழக்க வழக்கமும். நம் வாழ்வில் தினமும் நாம் பல்வேறு பழக்க வழக்கங்களை கொண்டுள்ளோம். ஆனால் அவற்றில் பல நம் உடல்நலத்தை பாதிக்கின்றன. இதைதான் நாம் சுய அழிவு நடத்தை என்கிறோம். பல மருத்துவர்கள் நமது அழிவு நடத்தைகள் குறித்து விளக்குகின்றனர். இந்த பழக்க வழக்கங்கள் தனி மனிதனின் வாழ்க்கையை வெகுவாக பாதிக்கின்றன. ஆனால் இந்த பழக்க வழக்கங்கள் குறுகிய காலத்தில் நிவாரணம் அளிக்க கூடியவையாக உள்ளன. ஆனால் இந்த பழக்கங்கள் நமது வாழ்வில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எனவே இந்த பழக்கங்களில் இருந்து விலகி இருப்பதே மனிதனுக்கு நன்மை பயக்கும். எனவே அன்றாட வாழ்க்கை முறையில் பின்பற்றும் ஒருசில பழக்கவழக்கங்கள் சிறப்பான எதிர்காலத்தை கட்டமைக்க வழிவகை செய்யும். வாழ்க்கையை வளப்படுத்தும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1. முறையான உடற்பயிற்சி: வாரத்தில் குறைந்தது 5 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இது வேகமான நடை, ஓட்டம், ஜாகிங், சைக்கிள் ஓட்டுதல் அல்லது நீச்சல் போன்ற மிதமான தீவிர ஏரோபிக் உடற்பயிற்சி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இது கவனச் சிதறலை கட்டுப்படுத்தும். ஆழ்ந்த தூக்கத்தை வரவழைக்கும். படைப்பாற்றல் திறனை மேம்படுத்தும்.


மேலும் படிக்க | இரவில் தூக்கம் வரவில்லையா? காலையில் எழுந்ததும் இதை மட்டும் செய்யுங்கள்! 


2. லிப்ட்டுகளுக்குப் பதிலாக படிக்கட்டுகளை பயன்படுத்தவும்: லிஃப்டுகளுக்குப் பதிலாக படிக்கட்டுகளில் செல்வது உடலுக்கு நன்மை பயக்கும். படிக்கட்டுகளில் ஏறுவது உங்கள் இதயத்தை வழுபடுத்தும் மற்றும் உங்கள் தசை, எலும்பு, மூட்டு மற்றும் நுரையீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.


3. ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதை தவிர்க்கவும்: ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதைத் தவிர்க்கவும். இது உங்கள் தசைகள் கடினமாக மாறாமல் இருப்பதை உறுதி செய்யும்.


4. ஆல்கஹால் உட்கொள்வது தவிர்க்கவும்: மது அருந்துவதன் மூலம் எதிர்மறையான பாதிப்புகளை குறைக்க முடியும் என சிலர் நம்புகின்றனர். வாழ்க்கையில் நடக்கும் துயரமான கடினமான விஷயங்களே எதிர்மறையான எண்ணங்களை உருவாக்குகின்றன. இது உங்களை மட்டுமன்றி உங்களை சுற்றியுள்ளவர்களையும் சேர்த்து பாதிக்கும்.


5. அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும்: அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும், குறிப்பாக இனிப்பு நிறைந்த உணவுகள் மற்றும் பானங்களை தவிர்க்கவும். ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்க்கவும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை கடைபிடிப்பதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | குளிர்கால முலாம்பழம் ‘வெண் பூசணிக்காய்’ ஆரோக்கிய நன்மைகள்...! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ