சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது காலில் அணிந்த துர்நாற்றம் அடிக்கும் சாக்ஸை (socks) நுகர்ந்ததால் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனாவின் ஃப்ஜியான் (Fujian) மாகாணத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவர் தினமும் தனது பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய பின்னர் தனது காலில் அணிந்துள்ள துர்நாற்றமுடைய முகர்ந்து பார்க்கும் வழக்கத்தை கொண்டுள்ளார். தினமும் இந்த பழக்கத்தை தொடர்ந்து செய்து கொண்டிருந்த அவர் அவருடைய கால் வியர்வையாக இருந்ததால், சாக்ஸில் பூஞ்சை தொற்று (fungal infestation) ஏற்பட்டுள்ளது. அந்த சாக்ஸை அவர் மூக்கால் நுகர்ந்த போது அந்த பூஞ்சை தொற்றனது அவரது மூச்சு வழியாக நுரையீரலை சென்றடைந்துள்ளது.


இவ்வாறு இவர் தினசரி தவறாமல் செய்த்துள்ளார். இதனால் அவரது நுரையீரல் முழுவதுமாக பூஞ்சைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு முற்றிலுமாக செயலிழந்துள்ளது. மேலும், அவர் தனது குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக இரவில் நீண்ட நேரம் விழித்திருந்ததால் அவருடைய நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தது என்றும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துர்நாற்றம் அடிக்கும் சாக்ஸ்-ல் உயிரைக் கொல்லக் கூடிய அளவுக்கு பயங்கரமான நோய் தொற்றுக்கள் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 


சாக்ஸில் துர்நாற்றம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையிலான துணி வகைகள் தற்போது கடைகளில் கிடைக்கின்றன. அத்தகைய, சாக்ஸ் அணியும்போது இத்தகையப் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். 2017 ஆம் ஆண்டு, துர்நாற்றம் அடிக்கும் கால்களால் பொது இடத்தில் தொல்லை (public nuisance) ஏற்படுத்தினார் என்று டெல்லியில் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து, பிரிங்டன் சிறைச்சாலையில் துர்நாற்றம் அடிக்கும் சாக்ஸை வைப்பதற்கு என்று தனியாக அறை அமைத்துள்ளனர்.