Choline Rich Foods: கோலின் மிகவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்து ஆகும். இது சில தாவரங்கள் மற்றும் விலங்குகள் சார்ந்த உணவுகளில் அதிகம் உள்ளது. கோலின் என்பது வளர்சிதை மாற்றம், நரம்பியல் ஆரோக்கியம், மூளை வளர்ச்சி மற்றும் பலவற்றை உள்ளடக்கிய இதர உடல் செயல்பாடுகளுக்கு தேவையான ஊட்டச்சத்து ஆகும். உங்கள் உடல் இயற்கையாகவே சிறிய அளவிலான கோலின் ஊட்டச்சத்தை உருவாக்கும் ஆற்றல் கொண்டது என்றாலும், இந்த ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய இது மட்டும் போதாது, எனவே உங்கள் உணவில் கோலின் நிறைந்த உணவுகள் அவசியம் தேவை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நமது உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு நன்மையளிக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் கொண்ட கோலின் சத்து வயது வந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரு நாளைக்கு முறையே 550 mg மற்றும் 425 mg தேவைப்படுகிறது. கருவின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு கோலின் முக்கியமானது என்பதால், கர்ப்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இந்த ஊட்டச்சத்தின் தேவை அதிகம் உள்ளது. எனவே, கர்ப்பிணிகளுக்கு ஒரு நாளைக்கு 450 மி.கி கோலின் தேவைப்படுகிறது, தாய்ப்பால் கொடுப்பவர்களுக்கு 550 மி.கி. எனவே, உடலில் ஆனால் எந்த குறைபாடும் ஏற்படாமல் இருக்க கோலின் சத்து நிறைந்த பொருட்களை தவறாமல் சாப்பிட வேண்டும். உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ் மூலம் கோலின் சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகளை பற்றி தெரிந்து கொள்வோம்.


நல்ல தூக்கத்திற்கு கொலின் சத்து அவசியம்


தூக்கம் என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தூக்கத்தின் போது, ​​உடல் தன்னைத் தானே சீர் செய்து கொள்கிறது, தூக்கமின்மை அல்லது ஆழ்ந்த தூக்கம் இல்லாத நிலை காரணமாக சோம்பல், சோர்வு, எரிச்சல், இதய நோய், மன அழுத்தம் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.


கோலின் நிறைந்துள்ள சில உணவுகள்


1. பப்பாளி


பப்பாளி பலருக்கும் பிடித்த பழமாகும். நல்ல செரிமானத்தை கொடுக்கும் உணவாக இருக்கும் இதனை வழக்கமாக சாப்பிட்டால், வயிறு ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. இந்தப் பழத்தை உண்பதன் மூலம் உடலுக்கு தேவையான கோலின் சத்து கிடைக்கும்.


மேலும் படிக்க | ஜிம், டயட் இல்லாமலும் ஜம்முனு எடை குறைக்க இந்த மசாலாக்கள் உதவும்: சாப்பிட்டு பாருங்க


2. முட்டை


முட்டைகள் புரத சத்து நிறைந்தவை என்பது அனைவரும் அறிந்ததே. அதே சமயத்தில், முட்டைகோலின் ஊச்சச்சத்தின் வளமான ஆதாரமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக மஞ்சள் கருவை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கோலின் ஊட்டச்சத்து குறைபாடு என்பதே ஏற்படாது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். ஒரு பெரிய முட்டையில் சுமார் 147 மி.கி கோலின் உள்ளது.


3. சிக்கன்


சிக்கன் என்னும் கோழி இறைச்சியில் புரதச் சத்து நிறந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இது உடலை வலிமையாக்குகிறது என்பதால், ஜின் டயட்டில் உள்ளவர்கள் இதனை வழக்கமாக சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளனர், 100 கிராம் வேகவைத்த கோழி இறைச்சியில் 73 மில்லிகிராம் கோலின் உள்ளது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். எனினும், இதனை அளவோடு சாப்பிட வேண்டும் என்பதை கருத்தில் கொள்ளவும்.


பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | Acidity பிரச்சனைக்கு நிவாரணம் அளிக்கும் அசத்தலான வீட்டு வைத்தியங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ