கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருக்க... வல்லுநர் கூறும் இந்த சிம்பிளான விஷயங்களை பாலோ பண்ணுங்க

இன்றைய காலகட்டத்தில், மக்களின் மோசமான வாழ்க்கை முறை, காரணமாக மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்து விட்டன. இதய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகிவிட்டது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 29, 2024, 12:23 PM IST
  • கார்டியோவாஸ்குலர் நோய்கள் (CVD) உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணமாக இருக்கின்றன.
  • மோசமான வாழ்க்கை முறை, காரணமாக மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்து விட்டன.
  • எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் இதய ஆரோக்கியத்தில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருக்க... வல்லுநர் கூறும் இந்த சிம்பிளான விஷயங்களை பாலோ பண்ணுங்க title=

இதய நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படும் வகையில், உலக இதய தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், 'உலக இதய தினத்தை' முன்னிட்டு, உலக சுகாதார அமைப்பின் பகீர் அறிக்கை ஒன்று வெளிவந்துள்ளது. அதில் தென்கிழக்கு ஆசியாவில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 3.9 மில்லியன் இறப்புகள் நிகழ்கின்றன என கூறப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில், மக்களின் மோசமான வாழ்க்கை முறை, காரணமாக மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்து விட்டன. இதய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகிவிட்டது. 

கார்டியோவாஸ்குலர் நோய்கள் (CVD) உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணமாக இருக்கின்றன. இந்தியாவிலும், 2020ம் ஆண்டில் இதய நோயால் சுமார் 47.7 லட்சம் இறப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த காலங்களில் இதய நோய்க்கு ஒரே மாதிரியான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பாதிப்பக்கட்ட நபரின் தனிப்பட்ட தேவைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், தற்போது, ​​பாதிக்கப்பட்ட நபர்களின் உடல் நல தேவைகளை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ற வகையில் இதய நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் இதய ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிகப்படியான கொலஸ்ட்ரால், நரம்புகளில் அடைப்பை ஏற்படுத்தி, ரத்த ஓட்டத்தை பாதித்து, மாரடைப்பு மற்றும் பிற தீவிர இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. கார்டியாலஜிகல் சொசைட்டி ஆஃப் இந்தியா சமீபத்தில் இது குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது, அதில் ஒவ்வொரு நபருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் இருக்க வேண்டிய அளவு இருக்கலானம் என்பதை தனிப்பட்ட உடல் நிலை, மற்றும் அவருக்கு இருக்கும் இதய நோய் ஆபத்து அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. உதாரணமாக, ஏற்கனவே இதய நோய் அல்லது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, கெட்ட கொலஸ்ட்ரால் அளவு 55 mg/dL க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | ஜிம், டயட் இல்லாமலும் ஜம்முனு எடை குறைக்க இந்த மசாலாக்கள் உதவும்: சாப்பிட்டு பாருங்க

தில்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனையின் பேராசிரியர் டாக்டர் ப்ரீத்தி குப்தா, கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க, ஒவ்வொரு நோயாளியின் தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் சிகிச்சை அவசியம் என்கிறார். சிகிச்சை தனிப்பட்டதாக இருந்தால், நோயாளிகள் விரைவாக குணமடைவார்கள் மற்றும் விளைவுகள் சிறப்பாக இருக்கும். இதனால், 

கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படவும், மாரடைப்பு அபாயத்தை தடுக்கவும் கடைபிடிக்க வேண்டியவை

1. முறையான உணவுமுறை, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்துதல் போன்ற வழிமுறைகளை, ஒவ்வொருவரின் நிலைக்கு ஏற்ப மருத்துவர்களின் அறிவுரையை பின்பற்றி மாற்றிக்கொள்ளலாம்.

2. வழக்கமான சோதனை மூலம், கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் கண்காணித்து அதற்கு ஏற்ப, உணவு பழக்கங்கள் மற்றும் சிகிச்சையில் அவ்வப்போது மாற்றங்களைச் செய்யலாம்.

3, பல சந்தர்ப்பங்களில், வாழ்க்கை முறை மாற்றங்கள் மட்டும் போதாது. ஒருவரின் உடல் நிலைக்கு ஏற்ற டயட் திட்டத்தின் கீழ் சரியான உணவுகளின் தேர்வு மற்றும் மருந்துகளின் கலவையையும் தீர்மானிக்க முடியும்.

4. உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசித்து அவர் கூறும் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையை கடைபிடிப்பது முக்கியம். இதன் மூலம் மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்க முடியும்.

மேலும் படிக்க | Acidity பிரச்சனைக்கு நிவாரணம் அளிக்கும் அசத்தலான வீட்டு வைத்தியங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News