உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்டவர்களா நீங்கள்? உங்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி காத்திருக்கிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிகரேட் புகைப்பவர்களின் உடலின் உள்ள சதைகள் நேரடியாக சேதமடைய செய்கிறது என ஓர் ஆய்வின் முடிவு தெரிவிக்கின்றது.


புகைப் பிடிப்பதினால் கால்களின் தசைகளில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டு வரும் சிறிய இரத்தக் குழாய்களின் எண்ணிக்கையை குறைக்கிறது என இந்த ஆய்வின் முடிவு தெரிவிக்கின்றது.


புகைப்பிடிப்பதினால் ஒருவரின் தசைகளை பலவீனம் அடைய செய்கிறது, நுரையீரலை அழிக்கின்றது. இதனால் புகைப்பிடிக்கும் நபரின் திறனை இந்த பழக்கம் கட்டுப்படுத்துகிறது. இதனால் புகைப்பிடிக்கும் நடவடிக்கை உடற்பயிற்சியை மட்டுப்படுத்துவதாக இந்த ஆய்வு கூறுகிறது.


இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் கூறுவதாவது... சிகரெட் புகைப்பது என்பது, நேரடியாக தசைகள் சேதமடைவதால், இரத்தக் குழாய்களில் செயல்பாட்டினை குறைத்தல், உடலில் இருக்கும் ஆக்ஸிஜனின் அளவு மற்றும் ஊட்டச்சத்துக்களை குறைத்தல், போன்ற காரியங்களை மேற்கொள்கிறது. மேலும், நோய்த்தாக்கம் உள்ள நுரையீரல் நோய் (சிஓபிடி) மற்றும் நீரிழிவு நோய் போன்ற பல நாள்பட்ட நோய்களுக்கு ஆபத்தான காரணிகயாகவும் அமைகின்றது.


கலிபோர்னியா பல்கலைக்கழகம், சான் டியாகோ யுனிவர்சிட்டி மற்றும் ஃபெடரல் பல்கலை கழகம் உடன் இணைந்து, ரியோ டி ஜெனிரோ மற்றும் கொச்சி பல்கலைக்கழகம் ஆகியவை 8 வார காலம் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். 


இந்த ஆய்வின் படி சிகரெட்டில் இருக்கும் 4000 வகையான இரசாயன பொருட்கள், உடல் தசை அழிவிற்கு காரணமாக அமைகின்றது. இந்த ஆய்வின் முன்னணி ஆராய்ச்சியாளர் எலென் ப்ரீன் இதுகுறித்து தெரிவிக்கையில், "புகையிலை சிகரெட்டுகளை பயன்படுத்துவது உடல் முழுவதும் தீங்கு விளைவிக்கும் விளைவுகளைத் தருகிறது என்பதை மக்களுக்கு காட்டுவது முக்கியம் ஆகும். தினசரி வாழ்க்கைக்கு தேவையான பெரிய தசை குழுக்கள் உட்பட, மற்றும் தூண்டப்பட்ட சேதத்தை தடுக்க உத்திகளை உருவாக்குவது சிகரெட் புகைக்கு தீங்கு விளைவிக்கும் கூறுகள்." எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.