குளிரால் ஏற்படும் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும் கிராம்பு...
சமையலறையில் மசாலாப் பொருட்களாகப் பயன்படுத்தப்படும் கிராம்பு மருத்துவ குணங்களின் புதையல் என கூறப்படுவது உங்களுக்கு தெரியுமா?
சமையலறையில் மசாலாப் பொருட்களாகப் பயன்படுத்தப்படும் கிராம்பு மருத்துவ குணங்களின் புதையல் என கூறப்படுவது உங்களுக்கு தெரியுமா?
குளிர் மற்றும் பல சிறிய விஷயங்களால் ஏற்படும் நோய்கள் பற்றி நாம் யாரும் தெளிவாக தெரிந்திருப்பதில்லை... அதே நேரத்தில் இந்த மாறிவரும் பருவத்தில், அன்றாட நோய்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வது ஒரு சவாலான விஷயமும் இல்லை என்பதை நாம் உணர வேண்டும்.
நமக்கு ஏற்படும் ஒவ்வொரு நோய்க்காகவும் நாம் மருத்துவரிடம் செல்ல முடியாது மற்றும் உடல்நலம் தொடர்பான சில பிரச்சினைகள் வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை கொண்டும் தீர்க்கலாம்.
சில நோய்களை நாம் சிறியதாக இருக்கிறது என்று புறக்கணிப்போம், ஆனால் அது மிகப்பெரியதாக உருமாறி நமக்கே சவாலாய் அமையும். அத்தகையை பல வகையான நோய்களும் நமது சமையலறை பொருட்களால் எளிதில் தீர்க்கப்படுகின்றன. ஆனால் நாம் இதுகுறித்து தகவல் இல்லாததால், மருத்துவரிடம் செல்கிறோம்.
குறிப்பாக இத்தனை மகத்துவம் கொண்ட ஒரு பொருள் நம் சமையளறையில் உள்ளது, அது மசாலாப் பொருட்களாகப் பயன்படுத்தப்படும் சிறிய கிராம்பு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?... பல நோய்களுக்கு இது பயனளிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?...
நிபுணர்களின் கூற்றுப்படி, சமையலறையில் மசாலாப் பொருட்களாகப் பயன்படுத்தப்படும் கிராம்பு மருத்துவ குணங்களின் புதையல். இதில் ஏராளமான புரதம், இரும்பு, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் ஆகியன அடங்கியுள்ளன. இது பல வகையான நோய்களில் இருந்து நமக்கு நிவாரணம் அளிக்கிறது.
வயிறு தொடர்பான நோய்களுக்கு இது மிகவும் பயனுள்ள சிகிச்சையாகும். அஜீரணம், வயிற்று வாயு அல்லது மலச்சிக்கல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிராம்பு மிகவும் நன்மை பயக்கும். ஒரு கிளாஸ் தண்ணீரில் சில துளி கிராம்பு எண்ணெயை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் பெரும் நிம்மதி கிடைக்கும்.
குளிர்கால பிரச்சினை இருக்கும்போது வாயில் ஒரு முழு கிராம்பு இருப்பது நிறைய நிம்மதியை அளிக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். குளிர்காலத்தில் இது உடலுக்கு வெப்பத்தை தருகிறது. தேயிலையில் கிராம்பு கலந்து குடிப்பதும் நன்மை பயக்கும். கிராம்பு குளிர் மற்றும் குளிரால் ஏற்படும் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.