இதயநோய்-க்கு தீர்வு அளிக்கும் தேங்காய் எண்ணெய்!
மனிதகுலத்தின் 90 சதவிகித உடல்குறைபாடுகள் கொழுப்பைக் கொண்டிருப்பதால் வருகிறது என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
மனிதகுலத்தின் 90 சதவிகித உடல்குறைபாடுகள் கொழுப்பைக் கொண்டிருப்பதால் வருகிறது என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. தேங்காய் எண்ணெய் அதிகம் பயன்படுத்துவதால் இதில் இருந்து தப்பிக்க வாய்புள்ளது எனவும் இந்த ஆய்வின் முடிவு கூறியுள்ளது.
அழகிற்கு கேடு என நினைக்கும் முகப்பரு மற்றும் பல சரும பிரச்சனைகள் தேங்காய் எண்ணெய் ஒரு காரணியாக அமைந்தாலும், இதய சம்பந்தமான பிரச்சனைகளுக்கம், மிக மோசமான இதய பிரச்சனைகளை குணப்படுத்தவும் தேங்காய் எண்ணை உதவுகிறது என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
ஒரு சமீபத்திய ஆய்வின் படி, நான்கு வாரங்களுக்கு தினசரி தேங்காய் எண்ணெய் சராசரியான அளவில் உட்கொண்டு வந்தால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தை தடுக்கலாம் என கூறுகிறது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் ஆராய்சி மாணவர் கய்-டீ கா மற்றும் பேராசிரியர் நிதா ஃபோர்ஹி ஆகியோர், 50 மற்றும் 75 வயதிற்கு இடையில் உள்ள 94 உறுப்பினர்களைக் கொண்டு இந்த ஆய்வினை நிகழ்த்தியுள்ளனர். ஆய்வின் முடிவானது தேங்காய் எண்ணெயை தொடர்ந்து உட்கொள்வோருக்கு இதய நோய், நீறிழிவு நோய் போன்ற நோய்களுக்கான அறிகுறிகள் இருப்பதாக தெரியவில்லை.
இந்த ஆய்வின் பல்கேற்பாளர்களை அவர்கள் 3 குழுக்களாக பிரித்தனர். ஒவ்வொருவரும் 50 கிராம் அல்லது மூன்று தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்-யை தங்கள் உணவோடு 4 வாரங்களுக்கு எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் பட்டனர்.
ஆய்வின் முடிவில் அவர்களது கொழுப்பின் அளவினை பரிசோதிக்கையில் அவர்களின் கொழுப்பு அளவு கனிசமாக குறைந்திருப்பதினை கண்டறிந்தனர்.
இந்த வியத்தகு மாற்றத்திற்கு பின்னர், பங்கேற்பாளர்களும் தொடர்ந்து தங்கள் உணவு பழக்கத்தினில் தேங்காய் எண்ணெயினை பயன்படுத்த தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.