Coconut Rice: ஈஸியான மற்றும் சுவையான தேங்காய் சாதம் செய்வது எப்படி
Coconut Rice: தேங்காய் சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு தேங்காய் சாதம் மிகவும் பிடிக்கும். காலையில் வேகமாவும், நன்கு சுவையுடனும் ஒரு அருமையான கலவை சாதம் தேங்காய் காதமாகும். தேங்காய் சாதத்தை பலர் பலவாறு சமைப்பார்கள். அப்படி தேங்காய் (Coconut) சாதத்தில் வேர்க்கடலை, முந்திரி பருப்பு சேர்த்து செய்யும் போது சூப்பராக இருக்கும். எனவே குழந்தைகளுக்கு பிடித்த இந்த தேங்காய் சாதத்தை எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம்.
தேங்காய் சாதத்திற்கான தேவையான பொருட்கள்:
வடித்த சாதம் - 1.5 கப்
தேங்காய் துருவல் - 1 கப்
எண்ணெய் - 2.5 டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
முந்திரி பருப்பு - 15-20
மிளகாய் வற்றல் - 2
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி - சிறிய துண்டு
ALSO READ | இயற்கை குளிர்பானம் இளநீரின் பயன்கள் -ஒரு பார்வை!
தேங்காய் சாதம் செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கடலைப் பருப்பு, முந்திரி, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
* பின்பு துருவி வைத்துள்ள தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.
* ஓரளவு பொன்னிறமாக மாறும் போது, சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்கு கிளறி விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையான தேங்காய் சாதம் ரெடி.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR
ALSO READ | இளநீர் மற்றும் கருப்பட்டி குளிர்பானம் தயாரிப்பு