டெங்கு காய்ச்சல் என்பது, கொசுக்கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் நோய்.  இது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை அதிகம், கடுமையாக பாதிக்கும்.இந்த நோய், நான்கு வகையான வைரஸ்களால் உண்டாக்கபடுவதால், ஒருவருக்கே பலமுறை டெங்கு வரலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பகலில் கடிக்கும் ஏடிஸ் ஈஜிப்டி என்னும் உடலில் கோடுள்ள கொசு மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. இந்த கொசு அநேகமாக மழை காலங்களில் இனபெருக்கம் செய்யும். மழை இல்லாத காலங்களில், தண்ணீர் தேங்கும் பூச்சாடிகள்,பிளாஸ்டிக் பைகள், கேன்கள்,தேங்காய் செரட்டைகள்,, டையர்கள், போன்றவற்றில் இனபெருக்கம் செய்கிறது. 


அறிகுறிகள்:-


அ) அதிக காய்ச்சல் (104 f போகலாம்)


ஆ) கடுமையான தலைவலி, வயிற்று வலி,


இ) கால் மற்றும் முட்டு வலி,


ஈ) கடுமையான தசை வலி, சோர்ந்து போதல், 


உ) உள்ளங்கை மற்றும் கால் பாதம் சிவந்து தடிக்கலம்,


ஊ) கண்ணின் பின்புறம் வலி,


எ) தோலில் ஒரு வகை கலர் மாற்றம் ஏற்படுத்தும்.


ஏ) உடலில் தோலில் இரத்த கசிவு, 


ஐ) மூக்கில் இரத்த வடிதல், வாய் ஈருவில் இரத்தம் வருதல்,


ஒ) கருப்பு மலம், இரத்த வாந்தி வரலாம்.


மேற் சொன்ன நோய் அறிகுறி இருந்தால் மருத்துவரை கலந்து ஆலோசிக்க வேண்டும். தற்கு தனியான மாத்திரை மருந்துகள் கிடையாது. காய்ச்சலை குறைக்க சாதாரண பேரசெடமால், போதிய ஒய்வு, சுத்தமான நீர் மற்றும் நீர் சம்பந்தமான ஆகாரங்கள் உட்கொள்ளுதல் தான் இதற்கு சிறந்த சிகிச்சை ஆகும்.


தடுக்க என்ன வழிகள்:-


அ) டெங்கு வைரஸை பரப்பும் கொசுவான aedes கொசுவை ஒழிக்க அல்லது கட்டுபடுத்த வேண்டும்.


ஆ) நீர் தேக்க தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். வீட் ஏசி ஃபரிட்ஸ் மூலம் வெளியாகும் தண்ணீர் தேங்கமல் நீக்கி விடவேண்டும்.


இ) உடலில் தேய்க்கும் கொசு ஒலிப்பான் மருந்தான deet உபயோகபடுத்தலாம்.