தீயாய் பரவும் கொரோனா; 10 நாட்களுக்கு லாக்டவுன் அமல்படுத்த வர்த்தக அமைப்பு கோரிக்கை
அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (Confederation Of All India Traders - CAIT), தேசிய தலைநகரில் அடுத்த 10 நாட்களுக்கு முழுமையான பொது முடக்கத்தை அமபல்படுத்த வேண்டும் என அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
நாடு முழுவதிலும், கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தொடங்கி, தொற்று பாதிப்புகள் மிக வேகமாக பரவி வருகிறது, குறிப்பாக, மகாராஷ்டிரா, தில்லி, கேரளா, தமிழகம் உள்ளிட்ட சில இடங்களில் கொரோனா பரவல் அதிகம் உள்ளது.
இந்நிலையில், தேசிய தலைநகர் தில்லியில் அதிகரித்து வரும் கோவிட் -19 ( COVID-19) தொற்றை பாதிப்பை கருத்தில் கொண்டு, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் பொருட்டு வார இறுதி ஊரடங்கு உத்தரவை வியாழக்கிழமை அறிவித்தது.
அதை தொடர்ந்து, இன்று அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (Confederation Of All India Traders - CAIT), தேசிய தலைநகரில் அடுத்த 10 நாட்களுக்கு முழுமையான பொது முடக்கத்தை அமபல்படுத்த வேண்டும் என ஆம் ஆத்மி தலைமையிலான அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
"தீயை போல் பரவை வரும் கொரோனா வைரஸ் (Corona Virus) பரவலை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க ண்டிய நேரம் வந்துவிட்டது. குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு ஒரு முழுமையான லாக்டவுனை செய்வது சரியான செயலாகத் தோன்றுகிறது" என்று CAIT அமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் கூறினார்.
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து வருவது மக்கள் மனதில் பீதியை கிளப்பியுள்ளது.
இதுவரை இல்லாத அளவில் தேசிய அளவில் தொடர்ந்து, ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது பதிவகியுள்ளது. தேசிய அளவில் கடந்த 24 மணி நேரத்தில், 2.17 லட்சம் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
கொரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்வது குறித்து, நேற்று மாநில ஆளுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
கொரோனா பரவலை தடுக்க தேவையான அளவுக்கு தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கும் என்று அந்த கலந்தாலோசனைக் கூட்டத்தில் பிரதமர் உறுதியளித்துள்ளார்.
ALSO READ | சில மாநிலங்களில் சரியான திட்டமிடல் இல்லை, 9% தடுப்பூசிகள் வீணாகியுள்ளன: மத்திய அரசு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR