சில மாநிலங்களில் சரியான திட்டமிடல் இல்லை, 9% தடுப்பூசிகள் வீணாகியுள்ளன:மத்திய அரசு

மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷண், இன்று காலை 8 மணி வரை, நாட்டில் 10.85 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 40 லட்சத்திற்கும் அதிகமான மருந்துகள் வழங்கப்பட்டன என தெரிவித்தார்.

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 13, 2021, 05:58 PM IST
  • இந்தியாவில் இதுவரை 10 கோடிக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
  • ரஷ்யாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசியான ஸ்பூட்னிக் -V (Sputnik-V ) தடுப்பூசியை பயன்படுத்த DCGI இன்று அனுமதி வழங்கியுள்ளது.
சில மாநிலங்களில் சரியான திட்டமிடல் இல்லை, 9% தடுப்பூசிகள் வீணாகியுள்ளன:மத்திய அரசு

கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் இதுவரை 10 கோடிக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷண், இன்று காலை 8 மணி வரை, நாட்டில் 10.85 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 40 லட்சத்திற்கும் அதிகமான மருந்துகள் வழங்கப்பட்டன என தெரிவித்தார்.

இன்று காலை 11 மணி வரையிலான தரவுகளின்படி, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில்  உபயோகிக்காமல் உள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை  1,67,20,000 க்கும் அதிகமாக உள்ளன என மத்திய அரசு கூறியுள்ளது.  சில மாநிலங்களில் சரியான திட்டமிடல் இல்லாததால் 8-9% தடுப்பூசிகள் வீணாகியுள்ளன. இந்த மாதம் அதாவது ஏப்ரல் இறுதி வரை,  மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு 2,01,22,960 தடுப்பூசிகள் வழங்கப்படும்.

மத்திய அரசு (Central Government) போதுமான தடுப்பூசிகள் அனுப்பியுள்ள போதிலும், சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தினால் ஏற்பட்டுள்ளது எனக் கூறிய மத்திய சுகாதார செயலர், மத்திய அரசு கொடுக்கும் தடுப்பூசி எண்ணிக்கையினால் ஏற்பட்ட பற்றாக்குறை அல்ல என்பதை இந்த தரவுகள்  தெளிவாகக் காட்டுகிறது என  மத்திய சுகாதார செயலர் குறிப்பிட்டார்,

ஏற்கனவே கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற 2 வகையான தடுப்பூசி   பயன்பாட்டில் உள்ள நிலையில்,  ரஷ்யாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசியான ஸ்பூட்னிக் -V  (Sputnik-V ) தடுப்பூசியை பயன்படுத்த நேற்று நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ள நிலையில், இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு இந்த தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு மருந்துப் பொருட்கள் கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI)  இன்று அனுமதி வழங்கியுள்ளது. 

ALSO READ | Sputnik-V தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News