குளிர்காலத்தில் முள்ளங்கியை சாப்பிட்டால்... கிடைக்கும் நச்சுனு நாலு நன்மைகள் - உடல் எடையும் குறையுமாம்!
Health Tips For Weight Loss: குளிர்காலத்தில் உங்கள் உணவில் முள்ளங்கியை (Raddish) சேர்த்துக்கொண்டால் உடல் எடை குறைப்பில் மட்டுமின்றி இந்த நான்கு விதத்திலும் உடலுக்கு நன்மை அளிக்கும். அதன் ஆரோக்கிய நன்மைகளை இங்கு விரிவாக காணலாம்.
Health Benefits Of Radish In Winter: பருவமழைகாலம் தொடங்கிவிட்டது. அடுத்து மார்கழி, தை, மாசி மாதங்களில் பனியின் தாக்கம் அதிகம் இருக்கும். எனவே, இந்த குளிர் காலங்களில் உடல்நலனை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது அவசியமாகமும். குறிப்பாக, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உந்தும் வகையிலும், உடலுக்கு கதகதப்பை அளிக்கும் வகையிலும் செயலாற்றும் உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்கும்.
அந்த வகையில் குளிர்காலத்தில் ஒருவர் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டிய காய்கறி என்றால், அது முள்ளங்கிதான். முள்ளங்கியில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. வைட்டமிண்கள், கனிமங்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருக்கின்றன. இதனை பச்சையாகவும் சாப்பிடுவார்களஅ, அதே நேரத்தில் சமைத்தும் சாப்பிடுவார்கள். நம்மூரில் மசாலா சேர்த்து முள்ளங்கி சாம்பார், முள்ளங்கி பொரியலை சாப்பிடலாம். இந்நிலையில், குளிர்காலத்தில் முள்ளங்கியை சாப்பிட்டால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகளை இங்கு விரிவாக காணலாம்.
இதயத்திற்கு நல்லது
முள்ளங்கி கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும். அதேபோல், ரத்த அழுத்த அளவும் சீராக இருக்கும் உதவும். முள்ளங்கியில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் இதயநோய்க்கு எதிராக செயலாற்றும். குறிப்பாக, மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் வராமல் பார்த்துக்கொள்ளும்.
மேலும் படிக்க | சைனஸால் ஒரே தொல்லையா..கவலையவிடுங்க இதை பண்ணிப்பாருங்க !
சரும ஆரோக்கியத்திற்கு உதவும்
முள்ளங்கியில் வைட்டமிண் சி, நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால் சருமத்தில் இருக்கும் தேவையற்ற செல்களை நீக்க உதவும். இது வீக்கம் மற்றும் பருக்கள் வராமல் தடுக்கும். உடலில் உள்ள தேவையற்ற நச்சுகளை வெளியேற்றி சருமத்தை தெளிவாக்கம். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோலில் சுருக்கங்கள் ஏற்படாது.
சுகர் நோயாளிகள் கவனத்திற்கு...
முள்ளங்கி ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும் உதவும். இதில் உள்ள நார்ச்சத்து கார்போஹைரேட் செரிமானத்தை மெதுவாக்கும், குளூகோஸ் உறிஞ்சுதலையும் குறைக்கும். முள்ளங்கியின் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்க வழிவகுகின்றன. முள்ளங்கியில் இருக்கும் குறைந்த கிளைசெமிக் குறியீடு மற்றும் அதிக நீர் உள்ளடக்கம் சீரான ரத்த சர்க்கரை அளவை பாரமரிக்க உதவுகிறது. இது சுகர் நோயாளிகளுக்கு பேரூதவியாக செயலாற்றும்.
நச்சுக்களை வெளியேற்றும்
முள்ளங்கியை அதிகம் எடுத்துக்கொள்வதால் அது செரிமானத்திற்கும், நச்சு வெளியேற்றத்திற்கும் உதவும். இதில் உள்ள நார்ச்சத்து அளவு செரிமான நொதிகளை தூண்டி, மலச்சிக்கல் மற்றும் உப்புசம் போன்ற பிரச்னைகளை தவிர்க்கும். மேலும், முள்ளங்கி நச்சுக்களை வெளியேற்றி, குடல் ஆரோக்கியத்தை பாராமரிக்கும். குளிர்ச்சியால் ஏற்படும் செரிமானம் சார்ந்த பிரச்னைகளும் தீரும்.
உடல் எடை குறைக்க உதவும்
இதில் அதிக நீர்ச்சத்து இருக்கிறது. கூடவே நார்ச்சத்து இருக்கும். இதனை உண்டால் வயிறு நிறைந்த உணர்வை ஏற்படுத்தும். இதில் குறைவான கலோரிகள்தான் இருக்கிறது. குறிப்பாக செரிமானத்தை சீராக வைத்திருக்கும், வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டவும் முள்ளங்கி உதவும். அதேபோல், உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும் இது செயலாற்றும். குறைவான கலோரி, அதிக நீர்ச்சத்து ஆகியவை உடல் எடை குறைப்பில் முக்கிய பங்காற்றும்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் சார்ந்து எழுதப்பட்டதாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை)
மேலும் படிக்க | குளிரில் நடுங்கும் உடலை இதைச் சாப்பிட்டு வெப்படுத்துங்க !
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ