குளிர்காலத்தில் உடலை வெப்பமாக வைத்திருக்க இந்த வகை நட்ஸ் உங்களுக்கு உதவியாக இருக்கும். மேலும் இதுபோன்ற நட்ஸ் நாளொன்றுக்குத் தினமும் அளவாகச் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்துடன் மேம்படுத்த முடியும். இது குறித்து முழுமையாக இங்குப் பார்ப்போம்.
நட்ஸ் பொதுவாக அனைவரும் சாப்பிடுவது வழக்கம், ஆனால் அதில் குறிப்பிட்ட நட்ஸ் குறிப்பிட்ட காலத்தில் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் அவசியம். உடலைக் குளிர்காலத்தில் வெப்பமாக வைத்திருக்கவும் மற்றும் அதிக குளிர்ச்சியான உணர்வு ஏற்படுவதைத் தடுக்கவும் கீழேக் கொடுக்கப்பட்டுள்ள நட்ஸ் உங்களுக்கு வழிகாட்டும்.
பாதாம் பருப்பு : பாதாமில் ஆரோக்கியமான புரதங்கள், நார்ச்சத்து மற்றும் கொழுப்புகள் அதிகம் நிறைந்துள்ளன. பாதாமில் வைட்டமின் ஈ காணப்படுகிறது, இது ஆக்ஸிஜனேற்றத்திற்கும் உதவுகிறது.
அக்ரூட் பருப்பு :அக்ரூட் பருப்பில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், புரதச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. இவை அனைத்தும் உடலைச் சூட்டுடன் வைத்திருக்க உதவுகிறது.
முந்திரிப் பருப்பு : முந்திரிப் பருப்பில் நல்ல கொழுப்புகள் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளன. இது உடலைச் சூடாக்கி தசை செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
பெக்கன் பருப்பு :நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும் பெக்கன் பருப்பு, இது நார்ச்சத்துகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இதில் ஜிங்க் மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
பிரேசில் நட்ஸ் : பிரேசில் நட்ஸில் எலாஜிக் அமிலம் மற்றும் செலினியம் போன்றவை உள்ளன. பிரேசில் நட்ஸ் சாப்பிடுவதால் மார்பக புற்றுநோயின் அபாயம் குறையும். மேலும் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டைச் சீராக்குகிறது.
பிஸ்தா:பிஸ்தா பருப்பில் செலினியம், வைட்டமின் பி6, புரதச்சத்துக்கள், நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் நல்ல கொழுப்புகள் உள்ளிட்ட அனைத்தும் அடங்கியுள்ளது. இவை உடலுக்குத் தேவையான சூட்டையும் மற்றும் ஆற்றலையும் தரும்.
ஹேசல் நட்ஸ் :ஹேசல் நட்ஸில் செலினியம் மற்றும் வைட்டமின் ஈ அடங்கியுள்ளன. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.