கேன்சர் நோயில் இலவங்கப்பட்டை: சத்தான உணவுகளுடன், மசாலாப் பொருட்களும் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். இதன் பண்புகள் பல நோய்களில் இருந்து நம்மை காக்க உதவும். வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவாக இருந்தாலும் சரி, வெளி தயாரிப்பவர்களால் தயாரிக்கப்பட்டதாக உணவாக இருந்தாலும் சரி, மசாலாப் பொருட்களைப் பயன்படுத்துவது உணவின் சுவையை பன்மடங்கு அதிகரிக்கிறது. அனைத்து மசாலாப் பொருட்களும் அதன் சொந்த குணங்களைக் கொண்டுள்ளன. அத்தகைய மசாலாகளில் ஒன்று இலவங்கப்பட்டை. இந்த மசாலா பல குணங்களின் சுரங்கமாக கருதப்படுகிறது. இலவங்கப்பட்டை கண்டிப்பாக ஒவ்வொரு வீட்டின் சமையலிலும் பயன்படுத்தப்படுகிறது. மறுபுறம் இலவங்கப்பட்டை கேன்சர் போன்ற நோய்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கவும் உதவுகிறது. வாருங்கள் இன்று நாம் அதன் குணங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சரியான அளவு இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை கிட்டத்தட்ட எல்லா நாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு உணவில் அதற்கான அளவு வித்தியாசப்படும். காய்கறிகளுக்கு அரை டீஸ்பூன் அல்லது ஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டை பயன்படுத்தலாம். மறுபுறம் இலவங்கப்பட்டை அதிகமாக உட்கொள்வது வயிறு, கல்லீரல், சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். அதனால் அதன் பலன்களைப் பெற, சரியான் அளவில் சாப்பிடுங்கள். அதன்படி நீங்கள் இலவங்கப்பட்டையை குச்சி வடிவில் பயன்படுத்தினால், இதற்கு அரை குச்சி மட்டுமே போதுமானது.


மேலும் படிக்க | மலச்சிக்கலில் இருந்து நிரந்தர தீர்வு பெற வெறும் 10 ரூபாய் இருந்தால் போதும் 


இலவங்கப்பட்டையின் நன்மைகள்


1. இலவங்கப்பட்டை பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றம் பண்பு கொண்டது. மேலும் மசாலாப் பொருட்களில் பாலிஃபீனால்ஸ் எனப்படும் தாவர கலவை காணப்படுகிறது. இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இது இலவங்கப்பட்டையிலும் காணப்படுகிறது. இந்த மசாலா பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு. இது சீன மூலிகை மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. இது பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுக்கு எதிராக பாதுகாக்க பெரிதும் உதவுகிறது.


2. புற்றுநோய் போன்ற நோய்களைத் தடுப்பதில் இலவங்கப்பட்டை பயனுள்ளதாக இருக்கிறது. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை குறைக்கிறது. புற்றுநோயின் வளர்ச்சியிலும் இலவங்கப்பட்டையின் தாக்கம் காணப்படுவதாக ஒரு ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இரத்த நாளங்களில் புற்றுநோய் தொடர்பான கூறுகள் உருவாகி இருந்தால், இலவங்கப்பட்டை அவற்றை அழித்துவிடும்.


3. இலவங்கப்பட்டையின் பயன்பாடு நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது. டைப் 2 நீரிழிவு நோயில் இலவங்கப்பட்டை சாப்பிடுவது நன்மை பயக்கும். இது இரத்த சர்க்கரையில் உள்ள இன்சுலினை கட்டுப்படுத்த வேலை செய்கிறது. மேலும் இது சர்க்கரை நோயின் அபாயத்தையும் குறைக்கிறது. அதே நேரத்தில், இலவங்கப்பட்டை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. இதைப் பயன்படுத்துவதால் கொலஸ்ட்ரால் குறையும்.


(பொறுபுத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உயர் ரத்த அழுத்தம் இருந்தால் கால்களில் இந்த பிரச்சனைகள் ஏற்படலாம்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ