உயர் ரத்த அழுத்தம் இருந்தால் கால்களில் இந்த பிரச்சனைகள் ஏற்படலாம்!

உயர் இரத்த அழுத்தம் காரணமாக உங்கள் உடலைச் சுற்றியுள்ள இரத்த நாளங்கள் சேதமடைந்திருப்பதால் கால் மற்றும் கால்களை உள்ளடக்கிய பகுதிகளில் சில அறிகுறிகள் வெளிப்படுகிறது.   

Written by - RK Spark | Last Updated : Feb 15, 2023, 06:37 AM IST
  • ஒரு நாளைக்கு 6g (0.2oz) உப்பை விட குறைவாக சாப்பிட வேண்டும்.
  • இரத்த அழுத்தம் 180/110 அல்லது அதற்கு மேல் இருந்தால் மருத்துவரிடம் செல்லவேண்டும்.
  • 130/80 அல்லது அதற்கு மேல் அழுத்தம் இருந்தால் அது உயர் இரத்த அழுத்தமாகக் கருதப்படுகிறது.
உயர் ரத்த அழுத்தம் இருந்தால் கால்களில் இந்த பிரச்சனைகள் ஏற்படலாம்! title=

இரத்த நாளங்களில் இரத்த ஓட்டம் மற்றும் இரத்தத்தின் விசை அதிகமாக இருக்கும்போது உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.  120/80 அல்லது அதற்கும் குறைவான அளவு இருந்தால் அது சாதாரண அழுத்தம் என்றும், 130/80 அல்லது அதற்கு மேல் இருந்தால் அது உயர் இரத்த அழுத்தமாகக் கருதப்படுகிறது.  அதுவே இரத்த அழுத்தம் 180/110 அல்லது அதற்கு மேல் இருந்தால் நீங்கள் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.  பெரும்பாலும் உயர் இரத்த அழுத்தம் எவ்வித வெளிப்படையான அறிகுறிகளையும் வெளிப்படுத்துவதில்லை.  கொலஸ்ட்ராலை போலவே உயர் ரத்த அழுத்தமும் ஒரு சைலன்ட் கில்லர் என்று அழைக்கப்படுகிறது.  உயர் ரத்த அழுத்தம் நோயாளிகளுக்கு அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட இதய பிரச்சனைகளின் ஆபத்தை அதிகரிக்கிறது.

மேலும் படிக்க | பொதுவாக காணப்படும் புற்றுநோய்கள்: ஆண்களுக்கு எது?, பெண்களுக்கு எது?

உயர் இரத்த அழுத்தம் காரணமாக உங்கள் உடலைச் சுற்றியுள்ள இரத்த நாளங்கள் சேதமடைந்திருப்பதால் கால் மற்றும் கால்களை உள்ளடக்கிய பகுதிகளில் சில அறிகுறிகள் வெளிப்படுகிறது.  உயர் இரத்த அழுத்தம் உடலின் கீழ் பகுதியில் உள்ள தமனிகள் மற்றும் இரத்த நாளங்களை சேதப்படுத்தும், இது கால் பகுதிகளில் மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.  ரத்த அழுத்தத்தால் புற தமனி நோய் பாதிப்பு ஏற்பட்டு  தமனிகள் கைகள் அல்லது கால்களுக்கு இரத்த ஓட்டத்தை குறைக்கின்றன.  கால்களுக்கு ரத்த ஓட்டம் தடைபடும்போது கால் வலி ஏற்படக்கூடும்.  சிவப்பு அல்லது நீல கால்விரல்கள், கால்களில் கூச்ச உணர்வு, மற்றும் கால்களில் எதிர்பாராத முடி உதிர்தல் இவை அனைத்தும் உயர ரத்த அழுத்தத்தின் முக்கியமான அறிகுறிகள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் நோயாளிகளுக்கு உயர் ரத்த அழுத்தத்தால் மங்கலான பார்வை, மூக்கில் இருந்து இரத்தம் வடிதல், மூச்சுத் திணறல், நெஞ்சு வலி, தலைசுற்றல் மற்றும் தலைவலி ஆகியவை ஏற்படும்.  உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த பல வழிகள் உள்ளது.  மருத்துவரிடம் சிகிச்சை பெற்று மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ளலாம் மற்றும் சில ஆரோக்கியமான வழிகளிலும் இதனை நீங்கள் குணப்படுத்தலாம்.  எடுத்துக்காட்டாக ஆரோக்கியமான எடையை பராமரித்தல், தவறாமல் உடற்பயிற்சி செய்தல், ஆரோக்கியமான உணவை உண்ணுதல், உப்பைக் குறைத்தல், மதுவைக் கட்டுப்படுத்துதல் மற்றும் புகைபிடிப்பதை நிறுத்துதல் போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களைத் தவிர்ப்பதன் மூலமும் நீங்கள் உயர் ரத்த அழுத்த பிரச்னையை சரிசெய்யலாம்.  எவ்வளவு அதிகமாக உப்பு சாப்பிடுகிறோமோ அதைப்பொறுத்து ரத்த அழுத்தத்தின் அளவும் மாறுபடுகிறது.  ஒரு நாளைக்கு 6g (0.2oz) உப்பை விட குறைவாக சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மேலும் படிக்க | வெதுவெதுப்பான நீரில் தேனை கலந்து குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News