யூரிக் அமிலத்தைக் குறைப்பது என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமான விஷயமாக இருக்கிறது. இரத்தத்தில் அதிக அளவு யூரிக் அமிலம் என்பது பெரிய பிரச்சனையாகிவிடும். உடலில் ப்யூரின் என்ற வேதிப்பொருளின் முறிவினால் உருவாகும் யூரிக் அமிலம், உடலில் அதிகமாக தங்கினால் அது பிரச்சனையை அதிகரிக்கும். யூரிக் அமில அளம் அதிகமானால் சிறுநீரகங்கள் சிறுநீரை சரியாக வடிகட்ட முடியாது.
 
உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. மூட்டுவலியுடன், வீக்கம், சிறுநீரகக் கற்கள் போன்றவையும் ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், யூரிக் அமிலம் மூட்டுகளில் குவிந்து வலிக்கு காரணமாகிறது. பியூரின் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது பிரச்சனையை மேலும் அதிகரிக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எலுமிச்சைப்பழ பயன்பாடு


எலுமிச்சை நீர் எப்போதும் ஆரோக்கியமான பானமாக கருதப்படுகிறது. உடலின் pH அளவை பராமரிக்கிறது. எலுமிச்சை ரசத்தில் அதிக சிட்ரிக் அமிலம் உள்ளது, இது யூரிக் அமில படிகங்களை உடைத்து உடலில் இருந்து அகற்ற உதவுகிறது. வெதுவெதுப்பான நீரில் அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து குடிக்கவும். காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.


மேலும் படிக்க | Health Alert: ஹார்ட் அட்டாக் வருவதற்கு ஒரு மாதம் முன்பே வரும் ஹெல்ட் அலர்ட்! கவனமா இருங்க!


மஞ்சள் பால்


மஞ்சள் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது. குர்குமின் போன்ற சக்தி வாய்ந்த தனிமம் உள்ள மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வீக்கத்தையும் குறைக்கிறது. தொடர்ந்து மஞ்சள் பால் குடித்து வருவதால் யூரிக் அமிலம் உடலில் குறைகிறது. சூடான பாலில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து குடித்து வந்தால், ஆரோக்கியம் மேம்படும்.


தர்பூசணி ஜூஸ்
தர்பூசணி உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், அதில் உள்ள சிட்ரூலின் போன்ற கூறுகளும் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்க உதவியாக இருக்கும். தர்பூசணியை பழமாகவோ அல்லது ஜூஸாகவோ குடிக்கலாம்.  


வெள்ளரி சாறு
வெள்ளரிக்காய் கோடையில் மிகவும் நல்லது. உடலை நீரேற்றமாக வைத்திருப்பதோடு, உடலில் இருந்து யூரிக் அமிலத்தை வெளியேற்றவும் வெள்ளறிக்காய் உதவுகிறது.  


இஞ்சி தேநீர்
ஆயுர்வேதத்தில் இஞ்சிக்கு உள்ள முக்கியத்துவம் அதற்கு மருந்து என்ற அந்தஸ்து கொடுத்துள்ளது. அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக, யூரிக் அமிலத்தின் அளவை இஞ்சி விரைவாகக் குறைக்கிறது. யூரிக் அமிலத்தால் ஏற்படும் வலியிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது. யூரிக் அமிலம் அதிகரிப்பதால் சிரமப்படுகிறீர்கள் என்றால், இஞ்சி டீயை ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை குடிக்கவும். 


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | 40 வயசு பெண்ணா? 20 வயசு அழகியா மாற இந்த கால்சியம் உணவுகளை சேர்த்துக்கோங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ