40 வயசு பெண்ணா? 20 வயசு அழகியா மாற இந்த கால்சியம் உணவுகளை சேர்த்துக்கோங்க!

Best Calcium-Rich Foods For Bones : ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமான கனிமங்களில் கால்சியம் முக்கியமானது. கால்சியத்தில் ஏறக்குறைய 99% எலும்புகள் மற்றும் பற்களில் பாதுகாகப்படுகிறது. ஏனென்றால் கால்சியம் தான் எலும்புகள் மற்றும் பற்களுக்கு ஆதாரமான சத்து ஆகும்

அனைவருக்கும் கால்சியம் அவசியம் என்றாலும் பெண்களுக்கு கால்சியம் அதிகம் தேவைப்படுகிறது. இளம் வயது பெண்கள், மாதவிடாய் நின்றவர்கள், வயதானவர்கள் என அனைத்து வயது பெண்களுக்கும் ஆண்களைவிடஅதிக அளவு கால்சியம் தேவைப்படுகிறது. 

1 /7

ஆண்களுக்கும் கால்சியம் சத்து தேவைப்பட்டாலும், கருப்பை மற்றும் அதன் செயல்பாடுகளுடன் கால்சியத்திற்கு மிகப் பெரிய தொடர்பு உள்ளது. இதனால் தான் பெண்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் கனிமம் அத்தியாவசியமானது

2 /7

வைட்டமின் டி போதுமான அளவு இல்லாததால் உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படலாம் எனவே உடலில் வைட்டமின் டி குறைபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். வைட்டமின் டி உங்கள் உடலை கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளை உருவாக்க கால்சியம் அவசியமானது. போதுமான வைட்டமின் டி மற்றும் கால்சியம் இல்லாவிட்டால் அது நீண்ட கால பிரச்சனையாக மாறிவிடும்

3 /7

கால்சியம் குறைபாட்டால், மாதவிடாய் காலத்தில் தைராய்டு, முடி உதிர்தல், மூட்டு வலி, வளர்சிதை மாற்றக் கோளாறுகள், ஹார்மோன் பிரச்சனைகள் என பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகம்...  

4 /7

பெண்களின் ஆரோக்கியத்திற்கும் வலுவான எலும்புகளுக்கும் கால்சியத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றான  சோயா பால் உதவுகிறது. அதிகமான கால்சியம் சத்து கொண்டது சோயா பால்

5 /7

எள் மற்றும் எள்ளெண்ணெயில் அதிக கால்சியம் இருக்கிறது. எள் சேர்த்த உணவுகளையும், சமையலுக்கு எள்ளெண்ணெய் பயன்பாடும் போதுமான கால்சியத்தைக் கொடுத்துவிடும்

6 /7

ராகி, தினை போன்ற தானிய வகைகள் மற்றும் பருப்புகளிலும் கால்சியம் அதிக அளவு காணப்படுகிறது

7 /7

அத்திப்பழம் ஒரு சுவையான பழம் மட்டுமல்ல கால்சியம் நிறைந்த பழமாகும், பழமாகவும் உலர்பழமாகவும் இந்தப் பழத்தை உண்ணலாம்