Cocktail biryani Cooking Tips: சுவையான காக்டெய்ல் பிரியாணி செய்யும் சமையல் குறிப்பு
காக்டெயில் பிரியாணி… பெயரைக் கேட்டாலே வாயில் எச்சில் ஊறுகிறதா? சைவப் பிரியர்களுக்கு பிடித்த காய்கறி பிரியாணியை வித்தியாசமான முறையில் செய்யலாம். இது காக்டெய்ல் பிரியாணி.
காக்டெயில் பிரியாணி… பெயரைக் கேட்டாலே வாயில் எச்சில் ஊறுகிறதா? சைவப் பிரியர்களுக்கு பிடித்த காய்கறி பிரியாணியை வித்தியாசமான முறையில் செய்யலாம். இது காக்டெய்ல் பிரியாணி.
காக்டெய்ல் பிரியாணிக்கு தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - ஒரு கப்
தேங்காய் பால் - முக்கால் கப்
தண்ணீர் முக்கால் கப்
ரீபண்ட் ஆயில் - 100 கிராம்
நெய் - 100 கிராம்
பீன்ஸ்- 50 கிராம்
பட்டாணி - 50 கிராம்
குடை மிளகாய் - 50 கிராம்
கேரட் - 50 கிராம்
எலுமிச்சை பழம் - 1
நெய்- தேவையான அளவு
கொத்தமல்லி இலை - தேவையான அளவு
புதினா இலை-தேவையான அளவு
பச்சை மிளகாய் - 3
முந்திரி பருப்பு – தேவையான அளவு
மஞ்சள் பொடி - தேவையான
உப்பு - தேவையான அளவு
பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தேவையான அளவு
சின்ன வெங்காயம்- 100 கிராம்
இஞ்சி- 10 கிராம்
பூண்டு - 20 கிராம்
Also Read | நுங்கு உண்பதால் ஏற்படும் ஏராளமான நன்மைகள் என்ன தெரியுமா?
முதலில் அரிசியைக் நன்றாக கழுவி, அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். காய்கறிகளை நறுக்கி வைத்துகொள்ளுங்கள். வெங்காயத்தை நீளவாக்கிலும் தக்காளியை பொடியாகவும் நறுக்கவும்.
பட்டை, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி, தோல் நீக்கிய பூண்டு ஆகியவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய், நெய்யைக் காயவைத்து பிரிஞ்சி இலை, வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும், நன்றாக வதங்கியவுடன் பச்சை மிளகாய் மற்றும் அரைத்த விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
நன்றாக வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து அது கரையும் வரை வதக்கவும். பிறகு காய்கறியுடன் தேவையான உப்பு, மஞ்சள்தூள், தயிர், புதினா, மல்லித்தழை ஆகியவற்றையும் சேர்த்து நன்கு வதக்குங்கள்.
Also Read | தயிரில் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!
ஊற வைத்த பாசுமதி அரிசியை, குக்கரில் போட்டு, தேவையான தண்ணீர் மற்றும் தேங்காய்ப் பால் ஊற்றி மூடி வைக்கவும். குக்கரில் விசில் வந்ததும் தீயைக் குறைத்து, சிறு தீயில் 5 நிமிடம் வைத்திருந்து இறக்குங்கள்.
முந்திரிப்பருப்பு மற்றும் கொத்தமல்லித் தழையை நறுக்கி காக்டெய்ல் பிரியாணியை அலங்கரிக்கவும். தயிர் பச்சடியுடன் சாப்பிட காக்டெய்ல் பிரியாணி அற்புதமாய் இருக்கும்.
Also Read | Bizarre Hilarious: 16 மனைவிகள் 151 குழந்தைகள், அடுத்த திருமணத்திற்கு ரெடி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR