Corona Third Wave: கொரோனா மூன்றாம் அலையில் கர்நாடகா 7 மடங்கு அதிகம் பாதிக்கப்படலாம்!
இரண்டாவது அலைக்கு ஒப்பிடுகையில் மூன்றாம் அலையில் கர்நாடகாவில் ஏழு மடங்கு பாதிப்பு ஏற்படும் அதிலும் குறிப்பாக குழந்தைகள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்...
புதுடெல்லி: கோவிட் -19 இன் இரண்டாவது அலை இந்தியாவின் சில பகுதிகளில் குறையத் தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. இருப்பினும், கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால், மூன்றாவது அலை ஏற்படலாம் என்ற ஊகங்கள் அதிகமாகின.
இரண்டாவது அலைக்கு ஒப்பிடுகையில் மூன்றாம் அலையில் கர்நாடகாவில் ஏழு மடங்கு பாதிப்பு ஏற்படும் அதிலும் குறிப்பாக குழந்தைகள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்...
"மூன்றாம் அலையை அரசாங்கம் மட்டுமே தவிர்க்க முடியும். COVID-19 தடுப்பூசிகளின் வேகத்தை அதிகரிப்பது மற்றும் மக்கள் சரியான COVID-19 பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்வது என அரசு தரப்பில் தீவிர முயற்சிகள் தேவை.
Also Read | கொரோனா மூன்றாம் அலை: PM Cares நிதியில் 1213 ஆக்ஸிஜன் ஆலைகள்
முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது மற்றும் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை பேணுவது, அடிக்கடி கைகளை கழுவுவது போன்ற பாதுகாப்பு நெறிமுறைகளை மக்கள் மேற்கொள்வதை அரசு உறுதி செய்யவேண்டும்" என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 42,766 பேருக்கு புதிதாக கோவிட் -19 நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையும் சேர்த்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 32.9 மில்லியன்களாக அதிகரித்துள்ளது. நாட்டில் நேற்று 308 பேர் கோவிடுக்கு பலியானார்கள். இத்துடன் சேர்த்து மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 440,533 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒரே ஒறு ஆறுதல் என்னவென்றால், இரண்டாம் அலை அளவுக்கு மூன்றாம் அலையின் தாக்கம் மோசமாக இருக்காது எனக் கூறப்படும் நிலையில், கர்நாடகாவில் மட்டும் கொரோனா வைரஸ் மூன்றாம் அலையின் பாதிப்பு ஏழு மடங்காக இருக்கும் என்பது கவலைகளை அதிகரித்துள்ளது.
Also Read | 20L தடுப்பூசி இலக்கை அடைய தமிழகத்தில் 10000 தடுப்பூசி முகாம்கள்
கொரோனா வைரசின் டெல்டா திரிபு 111 நாடுகளில் பரவியுள்ள நிலையில், இதுவே உலகில் கொரோனா வைரசைப் பரப்பும் முக்கிய திரிபாக உருவெடுக்கலாம்" என்றும் எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன.
கொரோனா மூன்றாம் அலையைத் தவிர்க்க முடியாது எனக் கூறிய இந்திய மருத்துவக் கழகம் (Indian medical association), மத்திய-மாநில அரசாங்கங்கள் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டது.
மக்கள் கூட்டமாகக் கூடுவது தீவிரமாக கொரோனா பரவ வழிவகுக்கும். எனவே சுற்றுலா, புனித யாத்திரை போன்றவைகளை இன்னும் சில மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR