ஆக்டிவ் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது: சுகாதார அமைச்சகம்
இந்தியாவில் கொரோனா தொற்று ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக, சுகாதார அமைச்சகம் நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக, சுகாதார அமைச்சகம் நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது.
ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 3.6 லட்சமாக குறைந்துள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது. தற்போது இந்தியாவில் உள்ள ஆக்டிவ் நோயாளிகளின் சதவிகிதம் மொத்த தொற்று பாதிப்பில் 3.66 சதவிகிதம் மட்டுமே.
கடந்த 24 மணி நேரத்தில் 33,494 பேர் குணமடைந்துள்ளனர்.
மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில், தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்பதையே இந்த தகவல்கள் நமக்கு தெரிவிக்கின்றன. .
இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 97,96,769. மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 1,42,186 ஆகும்.
ALSO READ | கொரோனா தடுப்பூசிக்கு பிறகு 2 மாதங்களுக்கு No Alcohol: நிபுணர்கள் அறிவுரை
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR