COVID Ear: கொரோனாவினால் காது வலி - இரைச்சல்? மருத்துவர் கூறுவது என்ன!
மனித காதுகளின் உள் திசுக்களில் உள்ள சில புரதங்களை SARS-CoV-2 வைரஸ் கிருமி தாக்கும் சாத்தியக்க்கூறு உள்ளது.
கொரோனா வைரஸின் பொதுவான அறிகுறிகள் இருமல், சளி, தொண்டை வலி, காய்ச்சல் மற்றும் சோர்வு எனக் கூறப்படும் நிலையில், கோவிட்-19 நோயாளிகள் வைரஸை எதிர்த்துப் போராடும் போதோ அல்லது குணமடைந்த சில வாரங்களுக்குப் பிறகு காதுகளில் இரைச்சல் அல்லது செவித்திறன் இழப்பு ஆகிய பிரச்சனைகளை எதிர் கொள்வதாகவும், இதனை 'கோவிட் காது' (COVID Ear) எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Porvoo Transition Care மருத்துவமனையின் நுரையீரல் மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர் டாக்டர் சந்தோஷ் ஜா, தனியார் ஊடகம் ஒன்றிடம் இது குறித்து கூறுகையில், கொரோனா வைரஸ் நுரையீரலைத் தாக்குவதால், சுவாச மண்டலத்தை பாதிக்கிறது. ஆனால், அதனுடன் கூடவே, காது, மூக்கு மற்றும் தொண்டையையும் பாதிக்கிறது. வாசனை மற்றும் சுவை இழப்பு கோவிட்-19 அறிகுறிகளில் ஒன்றாகும். கூடுதலாக, Tinnitus எனப்படும் காதில் இரைச்சல், செவித்திறன் இழப்பு ஆகியவையும் ஏற்படுகிறது. இதனை கோவிட் காது (COVID Ear) என அழைக்கிறோம் என்றார்.
ALSO READ | Health Alert! மறதி, குழப்பம் அதிகமாக இருக்கிறதா; Vitamin B குறைபாடு இருக்கலாம்!
மனித காதுகளின் உள் திசுக்களில் SARS-CoV-2 வைரஸால் தாக்கப்படக்கூடிய புரதங்கள் உள்ளன என்று டாக்டர் ஜா மேலும் விளக்கினார். இதனால், நமது காது கேட்ட்கும் செயல்திறனின் பாதிப்பு அல்லது காதில் இரைச்சல் சத்தம் போன்ற அறிகுறிகளைக் காட்டலாம் எனவும் கூறினார்
கோவிட் காது உள்ளதற்கான அறிகுறிகள்:
செவித்திறன் இழப்பு
டின்னிடஸ் எனப்படும் காதில் இரைச்சல் சத்தம் (Tinnitus)
மயக்கம் மற்றும் உடலில் பேலன்ஸ் தவறுதல்
காது வலி
கோவிட் காது குணமடையும் காலம், அதற்கான அறிகுறிகளின் தீவிரத்தைப் பொறுத்தது என்று டாக்டர் ஜா கூறுகிறார். லேசான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள் 7-14 நாட்களில் குணமடையலாம், ஆனால் கடுமையான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள் குணமடைய அதிக நேரம் எடுக்கும் என்கிறார்.
ALSO READ | நாக்கின் நிறமும் ஆரோக்கியமும்; ‘இந்த’ நிறங்கள் தீவிர நோயின் எச்சரிக்கை மணி!
கோவிட் காது தாக்குதலில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
முறையான மருந்து மற்றும் கவனிப்பு இருந்தால், கோவிட் காது பாதிப்பை தடுக்க முடியும் என்று கூறும் டாக்டர் ஜா கீழ்கண்ட அறிவுரைகளை வழங்குகிறார்.
தொற்றில் இருந்து குணமாக மருத்துவ பரிந்துரைப்படி மருந்து எடுத்துக் கொள்ளுங்கள்
அடிக்கடி தண்ணீர் அருந்தி உடலில் ஈரப்பதம் குறையாமல் பார்த்துக் கொள்ளவும்.
நன்றாக சாப்பிட்டு நிறைய ஓய்வு எடுக்கவும்.
உங்கள் இருமல் மற்றும் தொண்டை வலியை போக்க
முறையான ஆங்கில மருந்துகளுடன், தேன் போன்ற வீட்டு வைத்தியங்களையும் கடைபிடிக்கவும்.
அறிகுறிகள் அதிகரித்தால் மருத்துவ உதவி பெறவும்.
ALSO READ | Omicron: ஒமிக்ரானில் இருந்து காக்கும் ‘5’ எளிய ஆயுர்வேத நடைமுறைகள்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR