Coronavirus update: தமிழ்நாடு, மகாராஷ்டிரா, பஞ்சாபில் அதிகரிக்கிறது கொரோனா
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு, பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிராவில் பாதிப்பு அதிகரித்துள்ளது.
புதுடெல்லி: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு, பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிராவில் பாதிப்பு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 759 பேருக்கு COVID-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 547 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். 4 இறப்புகள் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், அரசு உதவி பெறும் பள்ளியில் 56 மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 8,59,726
குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 8,42,309
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை: 4,870
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 12,547
Also Read | குஷ்பு சுந்தருக்கு ஆயிரம் விளக்கு தொகுதி ஒதுக்கீடு
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,501 பேருக்கு புதிதாக COVID-19 தொற்று நோய் ஏற்பட்டுள்ளது. 839 பேர் குணமடைந்துள்ளனர் 20 பேர் பலியாகியுள்ளதாக பஞ்சாப் மாநில அரசு தெரிவித்துள்ளது
பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா வைரஸின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை: 1,97,755
குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 1,80,133
சிகிச்சை பெற்று வருபவர்கள்: 11,550
இறப்பு எண்ணிக்கை: 6,072
Also Read | Oprah Winfrey நிகழ்ச்சியில் இந்திய கலாசாரம் பற்றி ஐஸ்வர்யா ராயின் சாதுரியமான பதில்கள்
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 16,620 புதிய COVID-19 தொற்று பதிவானது. 8,861 பேர் கோவிட்டில் இருந்து குணமடைந்துள்ளனர். 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் மொத்த கொரோனா பாதிப்பு: 23,14,413
குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 21,34,072
இறப்பு எண்ணிக்கை: 52,861
சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை: 1,26,231
Also Read | Taj Mahal பெயர் ராம் மஹால் என்று மாற்றப்படுமா? காரணம்!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR