கோவிட் 19 தடுப்பூசி: கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்கு மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் (DCGI) ஒப்புதல் அளித்துள்ளது. சீரம் நிறுவனத்தின் (SII)கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்ட் (Covishield) மற்றும் பாரத் பயோடெக்கின் தடுப்பூசியான கோவாக்சின் (Covaxin) ஆகியவற்றின் அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக, இந்திய மருந்து கட்டுபாட்டு ஆணைத்த்தின் (DCGI) இயக்குனர் வி.ஜி சோமானி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2 தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு இந்தியா


DCGI அளித்த ஒப்புதலை தொடர்ந்து, இரண்டு கொரோனா தடுப்பூசிக்கு (Corona Vaccine) ஒன்றாக ஒப்புதல் அளித்த உலகின் முதல் நாடாக இந்தியா திகழ்கிறது. இரண்டு தடுப்பூசிகளும் 2 முதல் 8 டிகிரி வெப்பநிலையில் சேமித்து வைக்க முடியும். அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளும் முற்றிலும் பாதுகாப்பானவை என்று வி.ஜி சோமானி கூறினார்.


கொரோனா வைரஸுடனான போருக்கு மத்தியில் சுமார் ஒரு வருட காலத்தில் இந்தியாவுக்கு 2 தடுப்பூசிகள் கிடைத்துள்ளன. கோவிஷீல்ட் (Covishield) மற்றும் கோவாக்சின் என்ற தடுப்பூசிகளை  அனைத்து மக்களுக்கு குழப்பம் ஏதுமில்லாமல் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், நாடு முழுவதும் இதற்கான ஒத்திகை நடந்து வருகிறது. இந்த தடுப்பூசி முதலில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் அல்லது கொரோனா எதிரான நடவடிக்கையில் களத்தில் உள்ள ஊழியர்களுக்கு போடப்படும்.


இந்தியா பயோடெக்கின் கோவாக்சின் (COVAXIN) முற்றிலும் இந்தியாவின் தயாரிப்பாகும். இந்த தடுப்பூசி ஹைதராபாத் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. கோவிஷீல்ட் தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் (Oxford)மற்றும் அஸ்ட்ராஜெனெகா  (AstraZeneca)ஆகியோரால் இணைந்து தயாரிக்கப்படுகிறது.


ALSO READ | கொரோனா தடுப்பூசியை பெற பதிவு செய்து கொள்வது எப்படி.. விபரம் உள்ளே..!!


இந்த இரு தடுப்பூசியின் செயல்திறன்


கோவாக்சின் தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது என்று DCGI கூறியுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகளில், 800 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. இது தவிர, பல விலங்குகளுக்கும் இந்த மருந்து செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளன. மூன்றாவது கட்ட பரிசோதனையில் 26,000 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.


கோவிஷீல்ட் பரிசோதனையில், பங்கேற்ற 23745 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பங்கேற்பாளர்களின் தரவுகளை சீரம் நிறுவனம் (SII) ஆய்வு செய்தது. இந்த தடுப்பூசி 70.42 சதவீதம் வரை செயல்திறன் மிக்கதாக இருக்கும் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் நடைபெற்ற இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட பரிசோதனைகளில் 1600 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.


கொரோனா தடுப்பூசியின் விலை


பாரத் பயோடெக் (Bharat Biotech) மற்றும் சீரம் நிறுவனம் தடுப்பூசி விலைகள் குறித்து இது வரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவாலா முன்பு கோவிஷீல்ட்டின் விலை சுமார் ரூ.400 ஆக இருக்கும் வாய்ப்புள்ளது என கூறினார். கோவாக்சின் விலை ரூ.100 க்கும் குறைவாக இருக்கலாம் என்றும் முன்னதாக கூறப்பட்டது.


இருப்பினும், சுகாதார ஊழியர்கள் மற்றும் கொரோனா களப்பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசியை இலவசமாக போடப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.


ALSO READ | குட்டி LPG சிலிண்டர் வாங்க முகவரி சான்று தேவையில்லை, அடையாள அட்டை போதும்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR