புதுடெல்லி: COVID-19 இன் பல அம்சங்களைப் பற்றி பல குழப்பமான கருத்துக்கள் நிலவினாலும், அனைவரும் ஒரேமனதாக ஒப்புக் கொள்ளும் ஒரு விஷயம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது ஒன்றே தொற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும் என்பதே. புளித்த உணவுகள் உங்கள் நோயெதிர்ப்பு உயிரணுக்களின் செயல்திறனை பலப்படுத்துகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகளாவிய COVID-19 தொற்றுநோயின் தாக்குதல் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தியுள்ளது: இந்த தொற்று நிலைக்கு எதிரான மிக முக்கியமான ஆயுதம் நோய் எதிர்ப்பு சக்தி. அதனால்தான் COVID-19 நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதற்காக உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் இரவு பகல் பாராமல் உழைக்கின்றனர்.


தடுப்பூசிகள் மற்றும் சில உணவு பழக்கவழக்கங்கள் நமது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும். வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள். 


நமது நோயெதிர்ப்பு உயிரணுக்களின் செயல்திறனை மேம்படுத்தும் பிற உணவுகளும் உள்ளன.  புளித்த உணவுகள் அத்தகைய மாயஜாலத்தை செய்யவல்லவை. 


புளித்த உணவுகள் என்றால், புளிப்புச் சுவை கொண்ட உணவு என்று பொருள் கொள்வது தவறு. பாக்டீரியா, ஈஸ்ட் அல்லது பிற உயிருள்ள நுண்ணுயிரிகள் உணவுப் பொருட்களில் உள்ல சர்க்கரையை உடைத்து ஆல்கஹால் மற்றும் அமிலமாக மாற்றும்போது உணவுப் பொருள் புளிக்கிறது. 


தயிர், இட்லி, தோசை, சில வகையான சீஸ் ஆகியவை புளித்த உணவுகளுக்கு எடுத்துக்காட்டுகள், அவை லாக்டிக் அமில பாக்டீரியா மற்றும் பிற உயிருள்ள நுண்ணுயிரிகளால் இயற்கையாக உருவாகின்றன. 
இந்த உணவுப் பொருட்கள் பல வழிகளில் அவை நம் ஆரோக்கியத்திற்கு பயனளிக்கின்றன என்று ஆராய்ச்சி கூறுகிறது. நமது செரிமான அமைப்பை மேம்படுத்துவதோடு, உடல் எடை இழப்பை அதிகரிப்பது மற்றும் நோயெதிர்ப்பு திறனை புதுப்பித்தல் ஆகியவை இந்த பாக்டீரியா மற்றும் நுண்ணுயிரிகள் கொடுக்கும் சுகாதார நன்மைகள் ஆகும்.


இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் சில புளித்த உணவின் பட்டியல்இவை: இட்லி, தோசை, ஆப்பம், டோக்லா, தயிர், மோர், கஞ்சி, பழைய சாதம், கூழ்


Read Also | சுத்தமான பசு நெய் உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன?