உள்துறை அமைச்சகம் பிப்ரவரி 1, 2021 முதல் நடைமுறைக்கு வரவுள்ள, கொரோனா தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது 2021 பிப்ரவரி 28 வரை நடைமுறையில் இருக்கும். கடந்த நான்கு மாதங்களில் நாட்டில் புதிய தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனினும் Corona Virus தொற்றுநோயை முற்றிலுமாக ஒழிக்க, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு உள்துறை அமைச்சகம்  மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது


கொரோனா பதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில், MoHFW ஆல் பரிந்துரைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முழுமையாக பின்பற்றப்படும்.


COVID-19  வழிகாட்டு நெறிமுறைகள்: மாஸ்குகள் அணிதல், சானிடைஸர்கள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில / யூனியன் பிரதேச அரசாங்கங்கள் எடுக்கும். COVID-19 தொடர்பன தேசிய அளவிலான வழிமுறைகள் நாடு முழுவதும் தொடர்ந்து பின்பற்றப்படும்.


சமூகம் / ஆன்மீகம் / விளையாட்டு / பொழுதுபோக்கு / கல்வி / கலாச்சாரம் ஆகியவை தொடர்பான நிகழ்ச்சியில், மண்டபம் அல்லது ஹாலின் கொள்திறனில், அதிகபட்சம் 50% வரை அனுமதிக்கப்பட்டுள்ளன. திறந்தவெளிகளில் நடத்தப்படும் கூட்டங்கள் அல்லது நிகழ்ச்சிகளுக்கு மாநில அரசின் நெறிமுறைகளுக்கு ஏற்ப அனுமதி வழங்கலாம்.


சினிமா அரங்குகள் மற்றும் தியேட்டர்கள் ஏற்கனவே 50% இருக்கை வசதி வரை அனுமதிக்கப்பட்டுள்ளன. 


சர்வதேச விமான பயணம் தொடர்பாக, மேலும் பயணிகளை அனுமதிப்பது தொடர்பாக, நிலைமையை மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் உள்துறை அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் ஒரு முடிவை எடுக்கலாம்.


பயணிகள் ரயில்சேவை; விமான பயணம்; மெட்ரோ ரயில்கள்; பள்ளிகள்; உயர் கல்வி நிறுவனங்கள்; ஹோட்டல் மற்றும் உணவகங்கள்; வணிக வளாகங்கள், மல்டிபிளெக்ஸ் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள்; யோகா மையங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் போன்றவற்றில், பொருத்தமான வழிமுறைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் கண்டிப்பாக செயல்படுத்தப்படும்.


65 வயதுக்கு மேற்பட்டவர்கள், நோயுற்ற நபர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.


ஆரோக்யா சேது மொபைல் செயலி  பயன்பாடு தொடர்ந்து ஊக்குவிக்கப்படும்.


ALSO READ | Health Tips: உடலின் பல பிரச்சனைகளுக்கு அருமருந்தாகும் தயிர்...!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR