பால் என்பது ஒரு குழந்தை உலகிற்கு வந்ததும் முதலில் கொடுக்கப்படும் உணவு. பிறந்தது முதல் இறக்கும் வரை பால் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் இயல்பாக பொருந்திய உணவு. தாய்ப்பால், மாட்டுப்பால், ஆட்டுப்பால், எருமைப்பால், ஒட்டகப்பால், ஏன் புலிப்பால் பற்றிக் கூட கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் ஆய்வகப் பால் (Lab Milk) பற்றி கேள்விப்பட்டது உண்டா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெரும்பாலனவர்களுக்கு லேப் மில்க் எனப்படும் ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படும் பால் பற்றி தெரியாது. பசுவின் பாலைப் போலவே, ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் பால் தான் லேப் மில்க் எனப்படும் ஆய்வகப் பால். எளிமையாகச் சொன்னால், இது பசும்பாலுக்கு மாற்றாகும், விலங்குகளையோ, விவசாய நிலங்களையோ உற்பத்தி செயல்பாட்டில் பயன்படுத்தாமல் தயாரிக்கப்படும் இந்த பால், ஆய்வகத்தில் வளர்க்கப்படும் பிராய்லர் கோழியைப் போன்றது என்று புரிந்துக் கொள்ளலாம்.
 
தாவர அடிப்படையிலான பாலில் இருப்பது போன்ற எந்தவொரு அம்சமும் ஆய்வக பாலில் இல்லை. எந்த விலங்குகளில் இருந்தும் கிடைக்காததால் இதை சைவப் பால் என்றும் சொல்லலாம்ஆனால் தாவர அடிப்படையிலான பால் போலல்லாமல், ஆய்வக பால் அதன் சுவை மற்றும் அதன் ஊட்டச்சத்து இரண்டிலும் பசுவின் பாலுக்கு ஒத்ததாக இருக்கிறது.


Also Read | ஒளிரும், ஆரோக்கியமான சருமம் தரும் பால், மேலும் பல நன்மைகள்!


பால் அல்லாத பிற மாற்று உணவுகளை தேடுபவர்களுக்கு இதுவொரு வரப்பிரசாதம். இது பாரம்பரிய பசுவின் பாலுக்கு மிகவும் யதார்த்தமான மற்றும் துல்லியமான மாற்றாகும்.


தேங்காய் பால், பாதாம் பால் போன்றவை சத்துக்களிலும் சரி, சுவையிலும் சரி, மாட்டுப்பாலில் இருந்து மாறுபடுகின்றன. ஒரு கிளாஸ் பசும்பாலில் 8 கிராம் புரதம் இருக்கிறது என்றால், ஒரு கப் பாதாம் பாலில் 1.5 கிராம் புரதம் இருக்கிறது. அதுவே ஒரு கிளாஸ் தேங்காய் பாலில் 0.5 கிராம் புரதம் மட்டுமே இருக்கிறது. 


அதேபோல், தாவர அடிப்படையிலான பாலில் மாடுகளின் பாலில் காணப்படும் முக்கியமான ஊட்டச்சத்துக்களைக் இருக்காது. பொதுவாக, தாவர அடிப்படையிலான பாலில் வைட்டமின் டி மற்றும் கால்சியம் பசும்பாலில் இருப்பது போல இருப்பதில்லை.


Also Read | உலக பால் தினம்; அதன் முக்கியத்துவம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்


 பசும்பாலுக்கு மிக நெருங்கிய மாற்றாக ஆய்வக பால் உருவாக்கப்பட்டுள்ளது. பசுவின் பாலில் இருக்கும் அதே அளவு புரதம், கொழுப்பு, கார்ப்ஸ், ஃபைபர் மற்றும் வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்களும் சேர்க்கப்படுகிறது.  


லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவராக இருந்தால், அதாவது உங்கள் உடலில் லாக்டோஸை ஜீரணிக்க தேவையான நொதி இல்லை என்றால் பாலை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிட முடியாது. 


ஆனால் தாவர சர்க்கரைகளால் தயாரிக்கப்படும் ஆய்வகப் பாலை பயன்படுத்தி தயாரிக்கபப்டும் ஐஸ்கிரீம்கள், பாலாடைக்கட்டிகள் மற்றும் பிற பால் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப்பொருட்கள் அனைத்தையும் யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.


Also Read | சோயா பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன


மாற்றியமைக்கப்பட்ட ஈஸ்டிலிருந்து (modified yeast) ஆய்வக பால் தயாரிக்கப்படுகிறது. மோர் மற்றும் கேசீன் ஆகியவற்றை நொதிக்க விஞ்ஞானிகள் ட்ரைக்கோடெர்மா ரீசி ஈஸ்ட் (Trichoderma reesei yeast) போன்ற ஈஸ்ட் வகைகளைப் பயன்படுத்துகின்றனர். இவை பசுவின் பாலில் காணப்படும் முதன்மை புரதங்களை சேர்ந்தவை.


பாக்டீரியா, பூஞ்சை அல்லது ஈஸ்ட் அல்லாத மைக்ரோஃப்ளோராவுடன் சில வகை ஆய்வக பால் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் எதைப் பயன்படுத்தினாலும், இறுதி இலக்கு மாட்டுப் பாலில் உள்ள சத்துக்களை கொண்டதாக தயாரிக்கப்படுகிறது லேப் பால்.


ஆய்வக பால் இன்னும் விற்பனைக்கு வரவில்லை, ஆனால் அடுத்த ஆண்டிற்குள் சந்தைக்கு விற்பனைக்கு வந்துவிடும்.


Also Read | குழந்தைகளின் கண்பார்வையை மேம்படச் செய்யும் உணவுகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR