ஒளிரும், ஆரோக்கியமான சருமம் தரும் பால், மேலும் பல நன்மைகள்!

குளிர்ந்த பசும்பாலை இரவில் குடித்துவிட்டு உறங்குவது உடல் ஆரோக்கியம் மட்டும் அல்லாமல், சரும பொளிவையும் அளிக்கும் என கூறப்படுகிறது!

Updated: Sep 23, 2019, 06:06 PM IST
ஒளிரும், ஆரோக்கியமான சருமம் தரும் பால், மேலும் பல நன்மைகள்!
Representational Image

குளிர்ந்த பசும்பாலை இரவில் குடித்துவிட்டு உறங்குவது உடல் ஆரோக்கியம் மட்டும் அல்லாமல், சரும பொளிவையும் அளிக்கும் என கூறப்படுகிறது!

மேலும், இது குளிர்ச்சிக்கான ஒரு சிறந்த இயற்கை தீர்வாகும். ஆனால் குளிர்ந்த பாலின் நன்மைகள் பற்றி ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும் என்பது வேதனை அளிக்கும் ஒன்று. குளிர்ந்த பால் குடிப்பதுடன், பால் ஆடையினை உங்கள் முகத்தில் தடவும் போது முகத்தில் உள்ள அமிலத்தன்மையிலிருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும் என கூறப்படுகிறது. குளிர்ந்த பாலின் மேலும் சில நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அமிலத்தன்மையிலிருந்து நிவாரணம்
அமிலத்தன்மையின் போது வயிற்றில் எரிச்சலைத் தவிர்க்க, குளிர்ந்த பால் குடிப்பது மிகவும் நன்மை பயக்கும். பாலில் லாக்டிக் அமிலம் உள்ளது, இது வயிற்று அமிலத்தன்மையை அமைதிப்படுத்தும். கூடுதலாக, இதில் அதிக அளவு கால்சியம் இருப்பதால் அமிலம் உருவாகுவதைத் தடுக்கிறது மற்றும் அதிகப்படியான அமிலத்தை உறிஞ்சிவிடுகிறது. இரவு உணவிற்கு பின்னர், குளிர்ந்த பாலில் இரண்டு ஸ்பூன் இசப்கோலை(Isabgol) கலந்து குடித்தல் மிகவும் நன்மை பயக்கும். இது அமிலத்தன்மையை ஏற்படுத்தாது.

செரிமானத்திற்கு உதவியாக இருக்கும்
குளிர்ந்த பாலில் செரிமானத்திற்கு உதவும் கார்மினேட்டிவ் கூறுகள் உள்ளன. இந்த உதவியுடன், உணவுக் குழாயின் உள்ளே சேமிக்கப்படும் கொழுப்பும் சுத்தம் செய்யப்படுகிறது. செரிமானத்தை மேம்படுத்த நீங்கள் பாலைப் பயன்படுத்த விரும்பினால், அதில் இஞ்சி அல்லது கருப்பு மிளகு சேர்க்கவும்.

இயற்கை முறையில் முகம் சுத்தம் செய்ய
பாலில் உள்ள லாக்டிக் அமில கூறுகள் சருமத்தில் உள்ள அழுக்கை வெளியேற்றும். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் சருமத்திலிருந்து அதிகப்படியான எண்ணெயை நீக்குகிறது.

பயன்பாட்டு முறை

  • குளிர்ந்த பாலில் பருத்தியை ஊற வைக்கவும்.
  • இதை வைத்து உங்கள் முகத்தை சுத்தம் செய்து ஐந்து நிமிடங்கள் அப்படியே விடவும்.
  • பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும்.
  • இதே முறையில் குளிர்ந்த பாலுடன் ஒவ்வொரு நாளும் உங்கள் முகத்தை சுத்தம் செய்யுங்கள்.
  • மேலும், பப்பாளியை குளிர்ந்த பாலில் கலந்து பேஸ்ட் தயாரிக்கவும். இந்த பேஸ்டை முகத்தில் தடவவும். இது இறந்த செல்களை நீக்க உதவுகிறது.