Curd Benefits For Hair: கூந்தலுக்கு தயிர் செய்யும் அற்புதமான நன்மைகள்
தயிர் தலைமுடிக்கு ஊட்டச்சத்து கொடுக்க கூடியது. பொடுகு பிரச்சனையை போக்க கூடியது என்று தயிரை பயன்படுத்துவதுண்டு.
கூந்தலை அழகாக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். இருப்பினும், மோசமான வாழ்க்கை முறை மற்றும் மாறிவரும் தண்ணீர் காரணமாக, பெரும்பாலானோருக்கு முடி பிரச்சனைகள் ஏற்படுகிறது. பொதுவாக அடர்த்தியான வலுவான பளபளப்பான கூந்தலை பெறுவது பலருக்கும் கனவாகவே இருக்கலாம். ஆனால் இது உண்மையில் கனவில்லை. நீங்கள் மெனக்கெட்டால் எளிதாக இதை பெற முடியும்.
தயிர் சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல, முடிக்கும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உண்மையில் கூந்தல் மிகவும் வறண்ட நிலையில் உள்ளவர்கள் கண்டிப்பாக தயிரை கூந்தலில் தடவ வேண்டும், ஆனால் தயிர் எவ்வளவு நேரம் தலைமுடியில் தடவ வேண்டும் என்பது சிலருக்கு மட்டுமே தெரியும், இதனால் நல்ல பலன் கிடைக்கும். எனவே தயிர் எப்படி முடிக்கு நன்மை பயக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | வாழைப்பழத்தின் உதவியுடன் முடிக்கு கெரட்டின் கிரீம் தயாரிக்கலாம்
உங்கள் தலைமுடியில் எவ்வளவு நேரம் தயிர் தடவ வேண்டும்?
தயிர் தடவி 30 நிமிடம் வைத்தால் போதும். அரை மணி நேரம் கழித்து சாதாரண நீரில் முடியைக் கழுவலாம். இந்த பேஸ்டை ஒவ்வொரு வாரமும் உங்கள் தலைமுடியில் தடவி வந்தால், முடி பளபளப்பாகவும், வளர்ச்சியும் அதிகரிக்கும்.
கூந்தலில் தயிர் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்
* கூந்தல் மிகவும் வறண்ட நிலையில் இருப்பவர்கள் கண்டிப்பாக தயிரை ட்ரை செய்ய வேண்டும். இது உங்கள் தலைமுடியை மிகவும் அழகாக மாற்றும்
* இது தவிர, தயிர் முடி வளர்ச்சியை வலுப்படுத்தவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பேஸ்ட்டை வாரம் ஒருமுறை தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
* பொடுகு பிரச்சனைக்கும் தயிர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்களுக்கு முடி உதிர்வு பிரச்சனை இருந்தால் கண்டிப்பாக இந்த பேஸ்ட்டை முயற்சிக்கவும்.
* வெள்ளை முடி பிரச்சனைக்கும் தயிர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது முடி வெள்ளையாக மாறுபவர்களும் இந்த பேஸ்ட்டை உபயோகிக்கலாம்.
தயிர் ஹேர் கண்டிஷனர்
முடிக்கு தயிர் சிறந்த இயற்கை கண்டிஷனர் என்று கூறலாம். உச்சந்தலையில் அரிப்பு மற்றும் எரிச்சலை போக்க கூடும். தயிருக்கு இயற்கை கண்டிஷனராக தயிருடன் தேன் கலந்து பயன்படுத்துவதன் மூலம் இவை இன்னும் சிறப்பாக பயன்படக்கூடும். இந்த கலவை முடியை அடர்த்தியாக்கும். மென்மையாகக் செய்யும். இது உச்சந்தலையின் ஈரப்பதத்தை இயற்கையாக போக்க கூடியது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ நியூஸ் இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR