சூரிய ஒளியில் நிற்பதால் அது தோலில் பட்டு தோல், வைட்டமின் டி-ஐ உற்பத்தி செய்யும். வைட்டமின் டி சத்தின் மிகப் பெரிய ஆதாரமாக சூரிய ஒளி கருதப்படுகிறது. இது நம் உடலில் கால்சியம் உண்டாக்க உதவுகிறது.  காலை நேர சூரியக் குளியலே சிறந்ததாகக் கருதப்படுகிறது, காரணம் பெரும்பாலும் சூரிய ஒளியின் நன்மைகள் அப்போதுதான் கிடைக்கும், மேலும் புற ஊதாக்  கதிர்களும் அந்தளவு வலுவாக இருக்காது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சூரிய ஒளியைக் கண்டவுடனேயே, மனிதர்களின் முகத்தில் மகிழ்ச்சி தோன்றி, அவர்களின் உடலில் புதிய ஆற்றல் தோன்றத் தொடங்குகிறது. சூரிய ஒளி போதுமான அளவு உடலில் படவில்லை என்றால், வைட்டமின் டி குறைபாடு உடலில் தொடங்குகிறது. இதன் காரணமாக மூட்டுவலி, உடல்வலி, மனச்சோர்வு, எரிச்சல் உணர்வுகள் ஆகிய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியும் குறைகிறது. தினமும் காலை  பிரகாசமான சூரிய ஒளியில் வெறும் அரை மணி நேரம் உட்கார்ந்து கொள்ளுங்கள். இதனால் உடலுக்கு வைட்டமின் டி கிடைப்பதுடன், உங்கள் உடலில் உள்ள அனைத்து வலிகளும், நோய்களும் நீங்கும். வைட்டமின் டி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இதன் காரணமாக, எந்தவொரு தொற்றுநோயையும் எதிர்த்துப் போராடுவதற்கு உடல் தயாராக இருக்கும்


தினம் அரை மணி நேரம் சூரிய ஒளியில் உட்காருவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்


வைட்டமின் D இன் சிறந்த ஆதாரம் சூரியன். தினமும் காலையில் சுமார் அரை மணி நேரம் சூரிய ஒளியில் உட்கார வேண்டும். இதனால் உடலுக்கு வைட்டமின் டி கிடைக்கிறது. குழந்தைகளை தினமும் காலை 30 நிமிடங்கள் சூரிய ஒளியில் வைத்திருந்தால் போதும், அதன் மூலம் அவர்களுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் (Health Tips) கிடைக்கும். எந்த வகைப் புற்று நோய் வருவதையும் தவிர்க்க சூரிய ஒளி நம் சருமத்தில் படுமாறு இருந்தால் போதும்.


சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டியை  அதிகபட்சம் பெறும் வழிமுறை


 சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி பெற, குறைந்தபட்ச ஆடைகளை அணிந்து சூரிய ஒளியில் உட்கார வேண்டும். உங்கள் கைகள், கால்கள் மற்றும் உடலின் தோல் முடிந்தவரை சூரிய ஒளி படும்படி இருக்க வேண்டும். 


மேலும் படிக்க | ஆரஞ்சு பழத்தில் இருக்கு உங்கள் எடை இழப்பு ரகசியம்: இப்படி சாப்பிடுங்க


வைட்டமின் டி ஏன் முக்கியமானது


உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வைட்டமின் டி மிகவும் முக்கியமானது. வைட்டமின் டி எலும்புகளை வலுவாக்கும். குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு வைட்டமின் டி குறையத் தொடங்குகிறது. வளரும் குழந்தைகளின் சரியான வளர்ச்சிக்கும், எலும்புகள் வலுப்பெறவும் தினமும் சூரிய ஒளியில் பட வேண்டும். இது குழந்தைகளை வலிமையாக்குகிறது.


நோய்களை விரட்டும் வைட்டமின் டி


வயதானவர்கள் தினமும் வைட்டமின் டி எடுத்துக் கொள்வது அவசியம். இதன் மூலம் எலும்பு முறிவு, உடல் வலி, முதுகு வலி போன்ற நோய்கள் குறையும். இன்சுலின் உற்பத்தியில் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது.வைட்டமின் டி குறைபாடு இருப்பதால், இன்சுலின் எதிர்ப்பு உடலில் ஏற்பட்டு, அது டைப் 2  நீரிழிவு நோயை உண்டாக்கும். 


தினமும் காலையில் வெறும் 30 நிமிடங்கள் சூரிய ஒளியில் நின்றாலே போதும், தூக்கமின்மை பிரச்சனை நீங்கி, நல்ல உறக்கம் பெற உதவும். தினமும் காலை குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்பதால் முகப்பரு,  சரும பிரச்சனைகள், மஞ்சள் காமாலை, சரும அழற்சி மற்றும்  பூஞ்சை தொற்று நோய்கள் போன்ற எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க உதவும்.


பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது. 


மேலும் படிக்க | Health Alert: புரத பவுடரை அதிகமா சேர்த்துகிட்டா என்னவெல்லாம் பிரச்சனை வரும்? பகீர் தகவல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ