Aluminium Foil Side Effects: நம்முடைய  ஆரோக்கியமற்ற உணவு முறையுடன், சில தவறான பழக்கங்களும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது என்றால் மிகை இல்லை. நாம் கடைபிடிக்கும் சில பழக்கங்கள், நமது உடல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கின்றன. அதில் ஒன்று உணவை பேக் செய்ய நாம் பயன்படுத்தும் அலுமினியம் ஃபாயில். இது மிகவும் ஆபத்தான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என உணவு வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அலுமினிய ஃபாயில் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்


உணவுகளை பிளாஸ்டிக் பைகள் அல்லது டப்பாக்களில் பேக் செய்தால் ஏற்படும் பக்க விளைவுகள் நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அலுமினிய ஃபாயில் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி பலருக்கு தெரியாத நிலை தான் உள்ளது. அலுமினியம் ஃபாயில் பேப்பரின் சில ஆபத்தான பக்கவிளைவுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.


அலுமினியம் தாளில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்


அலுமினியம் தாளில் உள்ள ரசாயனங்கள் உங்கள் ஆரோக்கியத்தை மிக மோசமாக பாதிக்கும். சூடான உணவை அலுமினியத் தாளில் பேக் செய்யும் போது, ​​வெப்பத்தின் காரணமாக, அலுமினிய ஃபாயில் பேப்பரில் உள்ள ரசாயனங்கள் உருகி, உணவில் கலக்கலாம். உணவுடன், அலுமினியம் தாளில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உங்கள் வயிற்றில் நுழைவதற்கு (Health Tips) இதுவே காரணம்.


மூளை ஆரோக்கிய பாதிப்பு


அலுமினியம் தாளில் காணப்படும் கூறுகள் உங்கள் மூளை ஆரோக்கியத்திற்கு பெரிதும் தீங்கு விளைவிக்கும். அலுமினியத் தாளில் பேக் செய்த உணவை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டால், அல்சைமர் போன்ற தீவிரமான மூளை பிரச்சனைகள் மற்றும் நோய்கள் தாக்கலாம். இது தவிர, அலுமினியம் ஃபாயில் பேப்பர் உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தையும் சேதப்படுத்தும்.


மேலும் படிக்க | குளிர்காலத்தில் உடற்பயிற்சி இல்லாமலேயே உடல் எடை குறைக்கலாம்... இதோ டிப்ஸ்..!


எலும்பு ஆரோக்கிய பாதிப்பு


அலுமினியம் பாயில் பயன்பாடு காரணமாக உணவில் கலக்கும் அலுமினிய துகள்கள் வயிற்றை அடையும் நிலையில், சிறுநீரகங்கள் அந்த கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்ற முடியாமல் உடலில் சேரலாம். இது எலும்புகளை வலுவிழக்கச் செய்து, ஆஸ்டியோபோரோசிஸ், மூட்டு வலி போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


நுரையீரல் பாதிப்பு


அலுமினிய ஃபாயிலில் உள்ள ஆபத்தான இரசாயனங்கள் உங்கள் உடலில் மெதுவாக சேரத் தொடங்கும் போது, ​​உங்களுக்கு சுவாசிப்பதில் சிக்கல் ஏற்படலாம். அலுமினியம் ஃபாயில் பேப்பரில் உணவைப் பேக்கிங் செய்வத நோய் எதிர்ப்புச் சக்தியையும் பாதிக்கும். 


சிறுநீரக பாதிப்பு


அலுமினியம் ஃபாயிலில் பேக் செய்யப்பட்ட உணவின் மூலம் அதிக அளவு அலுமினியம் உணவின் மூலம் வயிற்றுக்குள் செல்லும்போது, அதன் காரணமாக சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.


கல்லீரல் பாதிப்பு


அலுமினியம் ஃபாயிலில் பயன்படுத்துவதால், அதிக உள்ள இரசாயனங்கள் அளவில் வயிற்றில் சென்றால் கல்லீரல் பாதிக்கப்படுவதோடு, குடல் சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம். அதோடு நீண்ட நேரம் அலுமினியம் பாயில் வைத்திருக்கும் உணவுகள், சில சமயங்களில் கெட்டுப் போகும். இதனால் குடல் சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | வெயிட் லாஸ் முதல் டீடாக்ஸ் வரை... ABC ஜூஸ் செய்யும் மாயங்கள் பல


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ