Side effects of Vitamin C supplements Overdose: அஸ்கார்பிக் அமிலம் என்றும் அழைக்கப்படும் வைட்டமின் சி, சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். பாதிக்கபட்ட உடல் திசுக்களை பழுதுபார்ப்பது முதல், பளபளப்பான சருமமத்தை கொடுப்பது, முதுமையை தடுப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை, வைட்டமின் சி ஆரோக்கியத்திற்கு பல அற்புதமான நன்மைகளை அள்ளித் தருகிறது. அதோடு உணவில் உள்ள இரும்பு சத்தை உடல் கிரகித்துக் கொள்வதற்கும் உடலுக்கு வைட்டமின் சி சத்து தேவைப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான். அளவிற்கு அதிகமானால், ஆரோக்கியத்தை கொடுப்பதற்கு பதிலாக ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு (Health Tips) விளைவிக்கும். வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதை விட, வைட்டமின் சி சப்ளிமெண்ட்ஸ் என்னும் மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். சத்து மாத்திரைகள் என்பதால், மருத்துவரை கேட்காமல் அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்வது பெரும் தவறு. இந்நிலையில், வைட்டமின் சி சத்து உடலில் அதிகமானால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.


1. அளவிற்கு அதிகமாக வைட்டமின் சி சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வதால் சிறுநீரக கல் ஏற்படலாம். உடலில் சேரும் கூடுதல் வைட்டமின்-சி சில சமயங்களில் மற்ற தாது சத்துக்களுடன் கலந்து சிறு படிகங்களாக மாறி சிறுநீரகக் கல்லாக மாறலாம் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.


2. வைட்டமின் சி சத்து மாத்திரைகள் அளவிற்கு அதிகமானால், செரிமானத்திற்கு தேவையான நொதிகள் சரியாக சுரக்காமல், வயிற்றுப் பிடிப்பு மற்றும் வயிற்று வலி அதிகரிக்கலாம்.


3. வைட்டமின் சி உடலில் இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. வைட்டமின் சி அதிகப்படியான நுகர்வு உடலில் அதிகப்படியான இரும்பு சத்து சேர வழிவகுக்கும். அதிக அளவிலான இரும்புன் சத்து, கல்லீரல், கணையம், இதயம், தைராய்டு மற்றும் நரம்பு மண்டலத்திற்கு தீங்கு விளைவிக்கும். 


மேலும் படிக்க | சாக்லேட் மட்டுமல்ல... பிஸ்கட்டும் விஷம் தான்... எச்சரிக்கும் நிபுணர்கள்


4. வைட்டமின் சி சத்து மாத்திரைகளை அதிகமாக உட்கொள்வதால் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். 


5. பளபளப்பான சருமத்தைப் பெறுவதில் வைட்டமின் சி முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால் அதை அதிகமாக உட்கொள்வதால் சருமத்தில் எரிச்சல் அல்லது அரிப்பு ஏற்படலாம்.


6. வைட்டமின் சி மாத்திரைகளை அதிகமாக உட்கொள்வது அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சனையை அதிகரிக்கும்.


நாளொன்றுக்கு தேவையான வைட்டமின் சி 


பெண்களுக்கு தினசரி 75 மில்லிகிராம் தேவை என்றும், ஆண்களுக்கு தினசரி 90 மில்லிகிராம் தேவை என்றும் உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும், பெண்களைப் பொறுத்தவரை கர்ப்ப காலத்தில், அதிகமாக தேவைப்படும். இவர்கள் நாள்ஒன்றுக்கு 120 மில்லிகிராம் வைட்டமின் சி எடுத்துக் கொள்வது நல்லது என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே அளவோடு எடுத்துக் கொண்டால், எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். இந்த அளவை மீறும் போது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு வரும் என்பதை நினைவில் கொள்ளவும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | பால் பிடிக்காதா? பரவாயில்லை... கால்சியம் கிடைக்க இந்த உணவுகளையும் சாப்பிடலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ