Good News: தில்லியில் COVID-19 RT-PCR பரிசோதனை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது..!!!
டெல்லிவாசிகளுக்கு ஒரு நற்செய்தியாக, அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கம் தேசிய தலைநகரில் COVID-19 RT-PCR பரிசோதனையின் கட்டணக் குறைப்பை அறிவித்தது.
டெல்லிவாசிகளுக்கு ஒரு நற்செய்தியாக, அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கம் தேசிய தலைநகரில் COVID-19 RT-PCR பரிசோதனையின் கட்டணக் குறைப்பை அறிவித்தது.
COVID-19 சோதனைகளுக்கு தனியார் ஆய்வகங்களுக்குச் செல்வோருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். இந்த பரிசோதனைகள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக நடத்தப்படுகின்றன.
தனியார் ஆய்வகங்களில் ஆர்டி-பிசிஆர் ( RT-PCR) பரிசோதனையின் விலை தில்லியில் ரூ .800 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மாதிரி வீட்டிலிருந்து சேகரிக்கப்பட்டால், பரிசோதனை கட்டணம் ரூ .1,200 ஆக இருக்கும், அதில் வருகை கட்டணம் அடங்கும்.
முன்னதாக, ஆர்டி-பி.சி.ஆர் சோதனைக்காக மக்கள் தனியார் ஆய்வகங்களில் ரூ .2,400 செலவிட வேண்டியிருந்தது. ஆர்டி-பி.சி.ஆர் சோதனையின் விலை டெல்லியில் மூன்றில் இரண்டு பங்கு குறைக்கப்பட்டுள்ளது
"டெல்லியில் (Delhi) ஆர்டி பி.சி.ஆர் பரிசோதனைகளின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று நான் உத்தரவிட்டுள்ளேன். அதேசமயம் அரசு நிறுவனங்களில் பரிசோதனைகள் இலவசமாக நடத்தப்படுகின்றன, இருப்பினும், இது பிரைவேட் ஆய்வகங்களில் தங்கள் சோதனைகளை மேற்கொள்வோருக்கு உதவும்" என்று கெஜ்ரிவால் (Arvind Kejriwal) ட்வீட் செய்துள்ளார்.
டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் முதலமைச்சரின் ட்வீட்டுக்கு பதிலளித்து, இதற்கான உத்தரவுகள் உடனடியாக வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.
ஆர்டி-பி.சி.ஆர் மற்றும் ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட் ஆகியவை கொரோனா வைரஸைக் கண்டறிய இரண்டு வகையான பரிசோதனைகள். இரண்டு பரிசோதனைகளும் அரசாங்க சோதனை மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படுகின்றன, ஆனால் தனியார் கிளினிக்குகள் அல்லது மருத்துவமனைகளில் இதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
டெல்லி கடந்த 24 மணி நேரத்தில் 1,487 புதிய கொரோனா தொற்று பாதிப்புகளை பதிவு செய்துள்ளது, மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பிகள் திங்களன்று 35,091 ஆக உள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ALSO READ | COVID-19 நிலைமை பற்றி விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR