புதுடெல்லி: கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளை இந்தியா எதிர்கொள்ளலாம் என்ற அச்சங்களுகு மத்தியில் டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஹோலி கொண்டாட்டங்களை தடைசெய்யக்கூடும். பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஹோலி கொண்டாட்டங்களை தடை செய்ய பல அதிகாரிகள் ஆதரவாக உள்ளதாக தெரிகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனவே, டெல்லியில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஹோலி பண்டிகைக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன 
நேற்று, டெல்லியில் தொடர்ந்து இரண்டாவது நாளில் 800 க்கும் மேற்பட்ட COVID-19 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,47,984 ஆக உயர்ந்துள்ளது.


அதே நேரத்தில் கொரோனாவில் இருந்து 6.32 லட்சம் நோயாளிகள் மீண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விகிதம், தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக ஒரு சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. சனிக்கிழமை 813, வெள்ளிக்கிழமை 716, வியாழக்கிழமை 607, புதன்கிழமை 536 மற்றும் செவ்வாய்க்கிழமை 425 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


Also Read | Daddy Virat duties: ODI போட்டிகளுக்காக புனேவுக்கு செல்லும் விராட் குடும்பம் 


இதற்கிடையில், தனியார் ஊடகம் ஒன்றில் பேசிய டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். கொடிய நோயின் மற்றொரு புதிய அலையை டெல்லி எதிர்கொள்கிறதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ”கொரோனாவின் புதிய அலையால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களைப் பார்த்தால், பாதிப்பு விகிதம் 5% ஆக இருக்கிறது. டெல்லியில் இது சுமார் 1% ஆகும். எனவே, இது டெல்லியில் புதிய கோவிட் அலை ஏற்பட்டிருக்கிறது என்பதை இப்போது உறுதியாக சொல்லிவிட முடியாது” என்று தெரிவித்தார்.   


நிலைமை கட்டுப்பாட்டில் இல்லாததால் பீதி அடையத் தேவையில்லை என்று கடந்த வாரம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களுக்கு உறுதியளித்திருந்தார். நகரில் கொரோனா வழக்குகளின் அதிகரிப்பு ‘ஓரளவு’தான் இருப்பதாகவும், நிலைமையை அரசாங்கம் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் முதல்வர் தெரிவித்திருந்தார். 
ஏற்கனவே குஜராத் மாநிலத்தில் ஹோலி பண்டிகையன்று மக்கள் ஒன்று கூடுவதை தடை செய்யப்பட்டுள்ளது.  


Also Read | GST செலுத்துபவர்களுக்காக நிதியமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR