67வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்திற்கு சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதும், நடித்த தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் வெளியான் சிறந்த திரைப்படங்கள், நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாத்தில், முந்தைய ஆண்டும் வெளியான திரைப்படங்களில் சிறந்த படங்கள் தேர்தெடுக்கப்பட்டு தேசிய விருது பெற்ற திரப்படங்கள் அறிவிக்கப்படும்.
ஆனால், சென்ற வருடம் கொரோனா தொற்று (Corona Virus) காரணமாக இந்த அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'அசுரன்' படத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி, கென் கருணாஸ், பிரகாஷ் ராஜ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழுக்கு 7 விருதுகள் கிடைத்துள்ளன
தமிழ் படம் - அசுரன்
நடிகர் - தனுஷ்
துணை நடிகர் - விஜய் சேதுபதி
பாடல் - கண்ணான கண்ணே
குழந்தை நட்சத்திரம் - நாகவிஷால்
ஒலிப்பதிவு - ரசூல் பூக்குட்டி
ஜூரி விருது - ஒத்த செருப்பு
ALSO READ | Karnan Teaser: சம்பவம் இருக்கு! நாளை கர்ணன் படத்தின் டீசர் வெளியீடு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR