தலைநகர் Delhi-NCR பகுதிகளில் 43% பேருக்கு டெங்கு! அதிர்ச்சி தகவல்!!
டெல்லி மற்றும் என்.சி.ஆரில் 43 சதவீதம் பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதாக ஆய்வு ஒன்றில் வெளியான தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன
புதுடெல்லி: இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு வழக்கத்தை விட அதிகமாக இருக்கிறது. தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்களுக்கு டெங்கு காய்ச்சல் அதிக அளவில் ஏற்பட்டிருப்பதாக தர்வுகள் தெரிவிக்கின்றன.
டெல்லி மற்றும் என்.சி.ஆரில் 43 சதவீதம் பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதாக ஆய்வு ஒன்றில் வெளியான தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. டெங்கு பாதிப்பு தொடர்பாக தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தங்களைச் சுற்றியுள்ள யாருக்கும் தொற்று இல்லை என்று 53 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
டிஜிட்டல் தளமான ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ (LocalCircles) மூலம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பங்கேற்றவர்களில் 43 சதவீதம் பேர் தங்கள் குடும்பத்தினருக்கோ அல்லது தங்களுக்கு நெருக்கமானவருக்கோ இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் நடுப்பகுதியில் இருந்து, டெல்லி-என்சிஆர் பகுதியில் வசிக்கும் பலர், தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அதிக காய்ச்சல், சோர்வு மற்றும் மூட்டு வலி போன்ற டெங்கு அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
READ ALSO | மின்சார கட்டணம் அதிரடியாக அதிகரிக்கும்! விதிகளை அமல்படுத்தியது மத்திய அரசு
15,000 பேர் கணக்கெடுப்பில் கலந்துக் கொண்டனர். அதில் 57 சதவீதம் காசியாபாத், 45 சதவீதம் டெல்லி, 44 சதவீதம் நொய்டா, 40 சதவீதம் ஃபரிதாபாத்தில் மற்றும் 29 சதவீதம் பேர் குருகிராமைச் சேர்ந்தவர்கள். தங்களது நெருங்கிய உறவினர்களின் "நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்" டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் இருந்ததாக ஆய்வில் கலந்துக் கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்..
கணக்கெடுக்கப்பட்ட டெல்லி-என்.சி.ஆரில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களைச் சுற்றியுள்ள யாருக்கும் நோய்த்தொற்று இல்லை என்றும் மூன்று சதவீதம் பேர் இதைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது என்றும் கூறியுள்ளனர். இந்த ஆண்டு டெங்குவால் தங்கள் குடும்பத்தினர் அல்லது அவர்களுக்கு நெருக்கமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக 43 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
“கடந்த ஆறு வாரங்களாக வாரந்தோறும் ரத்த தட்டுக்களுக்கான (blood platelets) கோரிக்கைகள் 100 சதவிகிதம் அதிகரித்துள்ளன. டெல்லி மட்டுமின்றி என்சிஆர் பகுதியும் டெங்குவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. மேலும் பரவலைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் அதிகாரிகளின் உடனடித் தலையீடு மற்றும் கூடுதல் சுகாதாரப் பாதுகாப்புச் சேவைகளையும் இது பரிந்துரைக்கிறது” என்று லோக்கல் சர்க்கிள்ஸ் நிறுவனர் சச்சின் தபரியா கூறுகிறார்.
Also Read | மழை வெள்ளத்தில் இருந்து கிட்டத்தட்ட 500 பேரை மீட்டது NDRF
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR