மழை வெள்ளத்தில் இருந்து கிட்டத்தட்ட 500 பேரை மீட்டது NDRF; மீட்புப் பணி தொடர்கிறது

கடந்த 6 நாட்களாக பெய்த 50 சென்டிமீட்டர் மழையால் சென்னையின் பெரும் பகுதிகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், அருகிலுள்ள மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

சென்னை: சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட 500 பேரை NDRF வீரர்கள் மீட்டுள்ளனர். 13 தேசிய பேரிடர் மீட்புப் படை  குழுக்கள் தொடர்ந்து நடவடிக்கையில் ஈடுபட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவுகின்றன.

Also Read | பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி காப்பாற்றிய இளைஞர் உயிரிழப்பு!

1 /5

வியாழன் மதியம், இடைவிடாத மழை மற்றும் பலத்த காற்றுக்கு மத்தியில், சென்னையின் புறநகரில் உள்ள திருப்போரூர்க்கு NDRF குழு விரைந்தது. மோசமான வானிலைக்கு மத்தியில், மின் பரிமாற்றக் கோபுரத்தில் சிக்கிக் கொண்ட மூன்று மின்சார வாரிய பணியாளர்களை மீட்டனர்

2 /5

சென்னை மாநகரம் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்கும், பம்ப் செய்வதற்கும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் குழுவினர் போராடி வருகின்றனர். 

3 /5

வெள்ளத்தால் பாதிக்கப்படும் அடையாறு, தாம்பரம் மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரமாக உள்ளது.

4 /5

NDRF குழுக்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நீரால் சூழப்பட்டுள்ள வீடுகளில் சிக்கித் தவித்தவர்களுக்கு நூற்றுக்கணக்கான உணவு மற்றும் பால் பாக்கெட்டுகளை விநியோகித்து வருகின்றனர். 

5 /5

மீட்கப்பட்டவர்கள், இடுப்பு ஆழம் வரை நீர் உள்ள இடங்களில் படகுகள் மூலம் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். பொன்னேரி, முடிச்சூர், வரதராஜபுரம் போன்ற இடங்களில் பச்சிளம் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் படகுகள் மூலம் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். 

You May Like

Sponsored by Taboola