Detox Drink For Weight Loss: உடல் எடையை குறைக்கும் டீடாக்ஸ் பானம்: உடல் எடையை குறைக்க வெள்ளரி, எலுமிச்சை மற்றும் புதினா கலந்த இந்த டீடாக்ஸ் தண்ணீரை தினமும் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இது உடலில் சேரும் அழுக்குகளை சுத்தம் செய்வதோடு, உடல் கொழுப்பையும் எரிக்கும். இந்த சூப்பர் டிடாக்ஸ் பானத்தை எப்படி தயாரிப்பது தெரியுமா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல் எடையை குறைக்க பலர் பல்வேறு வகையில் முயற்சி செய்கிறார்கள். உடல் பருமனை குறைக்க, முதலில் உங்கள் பழக்கத்தை மாற்ற வேண்டும். தேநீர் மற்றும் காபியுடன் நாளைத் தொடங்குபவர்கள், முதலில் அதை கைவிட்டு, காலையில் டீடாக்ஸ் பானத்துடன் நாளைத் தொடங்க வேண்டும். டீடாக்ஸ் தண்ணீரை தினமும் குடிப்பதால் உடலில் சேரும் அழுக்குகள் சுத்தமாகும் என்பது மட்டுமின்றி உடல் எடையும் (Weight Loss) வேகமாக குறையும்.


வெள்ளரிக்காய், எலுமிச்சை மற்றும் புதினா சேர்த்து தயாரிக்கப்பட்ட இந்த பானத்தை வீட்டிலேயே எளிதாக தயார் செய்யலாம். எளிதில் கிடைக்கும் இந்த மூன்று பொருட்களையும் இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, அந்த தண்ணீரை வடிகட்டி காலையில் குடிக்கவும். நீங்கள் விரும்பினால், இந்த தண்ணீரை சேமித்து வைத்து நாள் முழுவதும் குடிக்கலாம்.


டீடாக்ஸ் தண்ணீரை தினமும் குடிப்பதன் மூலம், உடலில் சேரும் நச்சுக்கள் வெளியேறும். இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை சிறப்பாக மேம்படுத்தும். நச்சுக்கள் நீங்குவதால், சருமத்தில் பளபளப்பு தோன்றத் தொடங்குகிறது. களங்கமற்ற ஒளிரும் சருமத்தை அடையலாம். கூடுதலால்க, இந்த தண்ணீரை குடிப்பதால் உடல் எடையும் குறைகிறது என்பது சிறப்பு.


மேலும் படிக்க | கால் பாதங்களில் காணப்படும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்! ஆபத்து


வெள்ளரி, எலுமிச்சை மற்றும் புதினா கலந்த டிடாக்ஸ் பானத்தின் நன்மைகள்


கோடைக்கு ஏற்ற சிறப்பான பானம்


டிடாக்ஸ் பானம் குடிப்பதன் மூலம், உடலில் நீர்சத்து குறையாமல் இருக்கும். இதில் சேர்க்கும் வெள்ளரிக்காயில் 95%க்கும் அதிகமான நீர் உள்ளது. கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் இது உதவுகிறது. எலுமிச்சையில் அமிலத்தன்மை உள்ளதால் செரிமானத்தை சீராக பராமரிக்கிறது.


உடல் பருமனை குறைக்கும் சூப்பர் பானம்


எலுமிச்சை, வெள்ளரிக்காய் மற்றும் புதினாவுடன் தண்ணீரைக் குடிப்பதும் எடையைக் குறைக்க உதவுகிறது. இதை குடிப்பதால் செரிமானம் மேம்படும். அதோடு, வளர்சிதை மாற்ற விகிதமும் அதிகரிக்கிறது. கொழுப்பு மற்றும் கலோரிகளை எரிக்கவும் சிறப்பாக வேலை செய்கிறது. டிடாக்ஸ் தண்ணீர் குடிப்பதால் விரைவில் பசி எடுக்காது. இது எடை இழப்புக்கு உதவுகிறது.
 
நோய் எதிர்ப்பு சக்தி


புதினா, எலுமிச்சை மற்றும் வெள்ளரிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இதன் மூலம், ஃப்ரீ ரேடிக்கல்களால்  செல்களுக்கு ஏற்படும் பாதிப்பையும் தவிர்க்கலாம். இதனால் முதுமை எளிதில் அண்டாது


செரிமான ஆரோக்கியம்


நீங்கள் டீடாக்ஸ்பானத்துடன் நாளைத் தொடங்கினால்,  செரிமான ஆரோக்கியம்  மேம்படும். இந்த நீரை குடிப்பதால் செரிமானம் துரிதமடையும். வயிறு எளிதில் சுத்தமாகி மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும்.


உடலின் நச்சுக்கள் வெளியேறும்


டீடாக்ஸ் தண்ணீரை தினமும் குடிப்பதால் உடலில் சேரும் அழுக்குகள் சுத்தமாகும். உடலை உள்ளே இருந்து நச்சு நீக்கும் சத்துக்கள் இதில் காணப்படுகின்றன. டீடாக்ஸ் தண்ணீரை குடிப்பதால், சிறுநீர் மூலம் நச்சுப் பொருட்கள் வெளியேறும்.


சரும ஆரோக்கியம்


டீடாக்ஸ் வாட்டர் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருப்பதோடு, அழுக்குகள் அனைத்தும் நீங்கும். இதன் காரணமாக, சருமத்தின் தோற்றம் படிப்படியாக மேம்படத் தொடங்குகிறது. பருக்கள் மற்றும் முகப்பரு பிரச்சனை குறைகிறது மற்றும் சருமம் பளபளப்பாகும்.


பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | எச்சரிக்கை! மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ‘சில’உணவுகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ