தற்போதைய வாழ்க்கை முறையில், வயது வரம்பு இல்லாமல், அனைத்து வயதினரையும் ஆட்டிப்படைக்கும் ஒரு நோய் நீரிழிவு நோயாகும். முன்னர் வயதானவர்களை மட்டும் தன் பிடியில் சிக்க வைத்துக்கொண்டிருந்த இந்த நோய், இப்போது இளம் வயதினரையும் விட்டு வைப்பதில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமையலறையில் எளிதாகக் கிடைக்கும் மஞ்சள், ரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவும் என்பது  பலருக்கு தெரிவதில்லை.  நீரிழிவு நோயாளிகள் இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்வோம்.


சர்க்கரை நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சந்தையில் பல மருந்துகள் இருந்தாலும்,  எளிய எந்த வித பகக் விளைவும் இல்லாத வீட்டு வைத்தியம் என்றுமே சிறந்தது. உங்கள் சமையலறையில் எளிதாகக் கிடைக்கும் மஞ்சள் தான் அந்த அருமருந்து. இரத்தத்தில் உள்ள சர்க்கரையையும் இதன் மூலம் எளிதாகக் கட்டுப்படுத்தலாம் என்பது பலருக்கு தெரிவதில்லை. எனவே சர்க்கரை நோயாளிகள் இதை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.


மேலும் படிக்க | Health Alert: சாப்பிட்ட பின் ஒரு போதும் செய்யக் கூடாதவை


இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் மஞ்சள் 


மஞ்சள் உங்கள் காயங்களை ஆற்றுவதற்கு மட்டுமல்ல, நீரிழிவு நோயாளிகளுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதில் நிறைந்துள்ள ஆரோக்கிய பண்புகள்  காரணமாக நோயாளிகளின் இரத்த சர்க்கரை எளிதில் கட்டுப்படுத்தப்படுகிறது.


மஞ்சளைப் பயன்படுத்தும் முறை


மஞ்சளை இஞ்சியுடன் சேர்க்கும் போது பலன் பன்மடங்காகிறது. இஞ்சி மற்றும் மஞ்சளின் கலவை இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தினமும் காலையில் ஒரு கிளாஸ் பாலில் இஞ்சி-மஞ்சள் கலந்து குடிப்பது மிகவும் நன்மை பயக்கும்.



இந்த பானம் பிடிக்கவில்லை என்றால், மஞ்சளை பயன்படுத்த விரும்புபவர்கள் பிற வழிகளிலும் பயன்படுத்தலாம். முதலாவதாக, இதை எந்த காய்கறிகளை சமைக்கும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இது தவிர மஞ்சள் கலந்த நீரும் அருந்தலாம்.  மஞ்சள் தேநீர் நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


மேலும் படிக்க | மிதமிஞ்சிய உப்பு உயிருக்கே ஆபத்து; எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | நரை முடி கருமையாக, முடி பளபளக்க இதை செய்தால் போதும்: சூப்பர் டிப்ஸ் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR