சுகர் லெவலை குறைக்கனுமா? அப்போ இந்த பொருட்களை யூஸ் பண்ணுங்க
Blood Sugar: நம் சமையலறைகளில் உள்ள பல எளிய மசாலாப் பொருட்கள் நம் ஆரோக்கிய மேம்பாட்டிற்கு பெரிதும் உதவுகின்றன. அதன்படி சுகரை கண்ட்ரோலில் வைக்க சில பொருட்களை கட்டாயம் உங்கள் உணவில் சேர்க்க மறக்காதீர்கள்.
சர்க்கரை நோய்க்கான வீட்டு வைத்தியம்: சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவது எளிதல்ல. இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் என்பது மிகவும் பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. பெரும்பாலும் இது நமது வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறையின் காரணமாக உருவாகிறது. நீரிழிவு நோய் வருவதற்கு 2 காரணங்கள் உள்ளன. முதலாவது நமது வாழ்க்கை முறை, இரண்டாவது நமது மரபணு. அதனால்தான் ஒரு நீரிழிவு நோயாளி தனது உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே உங்கள் சமையலறையில் இருக்கும் மசாலாப் பொருட்களைக் கொண்டும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம். அவை என்ன பொருட்களை எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்துக்கொள்வோம்.
மிளகு
மிளகில் உள்ள மருத்துவ குணங்கள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே சர்க்கரை அளவை கட்டுப்படுத்த, மிளகு தூளை உணவுக்கு சற்று முன் உட்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | சர்க்கரை நோய் உள்ளவர்கள் புகை பிடித்தால் ஏற்படும் பாதிப்புகள்!
கிராம்பு
கிராம்புகளில் உள்ள பண்புகள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பொதுவாக நாம் சாப்பிட்ட பிறகு, உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. அதனால் சாப்பிட்ட பிறகு 1-2 கிராம்பு சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
கொத்தமல்லி விதைகள்
கொத்தமல்லி விதைகளை உட்கொள்வது நீரிழிவு நோயில் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இந்த விதைகள் இரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது. இதற்கு கொத்தமல்லி விதைகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு காலையில் இந்த தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கவும். இவை இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.
இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டையில் உள்ள பண்புகள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதற்கு ஒரு பாத்திரத்தில் இலவங்கப்பட்டையை போட்டு நன்கு கொதிக்க வைத்து இலவங்கப்பட்டை தேநீர் தயாரிக்கவும். பிறகு வடிகட்டி அதை பருகவும். இலவங்கப்பட்டை ஆன்டிவைரல், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. ஆகையால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்ததாக கருதப்படுகிறது.
வெந்தய விதைகள்
நார்ச்சத்து நிறைந்த வெந்தய விதையில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதற்கு உதவுகின்றன. எனவே ஊறவைத்த வெந்தயத்தை உட்கொள்வதன் மூலம், இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். இதனுடன், உங்கள் இதயத்தின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். மேலும் வெந்தய விதைகளால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவும் குறைகிறது.
மஞ்சள்
மஞ்சளில் உள்ள மருத்துவ குணங்கள் பல நோய்களை குணப்படுத்தும். ஏனெனில் மஞ்சளில் குர்குமின் உள்ளது, இவை சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | முட்டையை இப்படி சாப்பிட்டால் உங்களுக்கு ஆபத்து..! தவிர்த்துவிடுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ