முட்டையை இப்படி சாப்பிட்டால் உங்களுக்கு ஆபத்து..! தவிர்த்துவிடுங்கள்

புதிய மற்றும் சத்தான உணவை உண்பது ஆரோக்கியத்திற்கு அவசியம். ஆனால் பல சமயங்களில் இரவில் மிச்சம் இருக்கும் உணவை காலையில் சாப்பிட வைப்பார்கள். ஆனால் எல்லா உணவுகளையும் அப்படி சாப்பிடக்கூடாது. எந்தெந்த பழைய உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 31, 2023, 09:26 PM IST
 முட்டையை இப்படி சாப்பிட்டால் உங்களுக்கு ஆபத்து..! தவிர்த்துவிடுங்கள்

புதிய மற்றும் சத்தான உணவு ஆரோக்கியத்திற்கு அவசியம். ஆனால் பல சமயங்களில் மக்கள் இரவில் மிச்சமிருக்கும் உணவை காலையில் சாப்பிடுவார்கள். ஆனால் அவ்வாறு பழைய உணவுகளை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதாவது பழைய உணவு என்றாலும், சில உணவுகள் கெட்டுபோய் இருக்கும். அவற்றை வாசம் மூலமாகவே அறிந்து கொள்ளலாம். அப்படி இருக்கும் உணவுகளை சாப்பிடக்கூடாது. மீறி சாப்பிட்டால் உடல் உபாதைகளுக்கு உள்ளாக நேரிடும். 

பழைய முட்டை வேண்டாம்

முட்டை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் பழுதடைந்த முட்டையை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் உள்ள சால்மோனெல்லா பாக்டீரியா சமைத்தவுடன் மற்ற வகை பாக்டீரியாக்களை வேகமாக உருவாக்கி தீவிர வயிற்று நோய்களை உண்டாக்கும்.எனவே உடைந்த பழைய முட்டைகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

மேலும் படிக்க | உடல் எடை குறைய அரிசி உணவை தவிர்க்க வேண்டுமா... நிபுணர்கள் கூறுவது என்ன!

பழுதடைந்த பீட்ரூட் 

பீட்ரூட்டில் நைட்ரிக் ஆக்சைடு அதிகம் உள்ளது, இது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால் பீட்ரூட்டை சமைத்த பிறகு, இந்த கலவைகள் நைட்ரைட்டாகவும் பின்னர் நைட்ரோசமைனாகவும் மாறும். இவற்றில் சில புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்டவை. அதனால்தான் பீட்ரூட் உணவை நீண்ட நேரம் சமைத்த பிறகு தவிர்க்க வேண்டும். பழுதடைந்த பீட்ரூட் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும் 

கோழி உணவு 

உங்களுக்கு கோழிக்கறி சாப்பிடுவதில் விருப்பம் இருந்தால், அதை பழையதாக சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் கோழியில் சால்மோனெல்லா என்ற பாக்டீரியா உள்ளது, இது சமைத்த பிறகு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், 2 மணி நேரத்திற்கு மேல் வைத்திருந்தால் சமைத்த கோழியை சாப்பிட வேண்டாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Weight Loss Tips: தொப்பையால் தொல்லையா? பிஸ்தா சாப்பிடுங்க, உடனே பலன் தெரியும்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

More Stories

Trending News