நீரிழிவு நோய்க்கு வரப்பிரசாதமாகும் `இந்த` பழத்தின் விதைகளை தூக்கி எறியாதீர்கள்
நீரிழிவு நோய் என்பது நமது உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு நோயாகும்.
பழங்கள் என்றாலே சுவையானது தான். பல பழங்கள் சுவையாக மட்டுமல்ல, ஆரோக்கியத்தின் பொக்கிஷமாகவும் கருதப்படுகின்றன. அத்தகைய பழங்களில் ஒன்று நாவல் பழம். இது Java plum அல்லது Black Plum அல்லது Indian blackberry என அழைக்கபடுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
நீரிழிவு நோய்க்கு ஆரோக்கியமான உணவு அவசியம்
நீரிழிவு நோய் என்பது நமது உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு நோயாகும், இல்லையெனில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாடில்லாமல் இருக்கும். அது ஆரோக்கியத்தில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும். நல்ல ஆரோக்கியத்திற்காக பிரெஷ்ஷான பழங்களை சாப்பிட வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர், ஆனால் நீரிழிவு நோயாளிகள் எந்த பழத்தை சாப்பிடலாம், சாப்பிடக்கூடாது என்ற குழப்பத்தில் உள்ளனர்.
நாவல் பழ விதைகளை தூக்கி எறிய வேண்டாம்
பொதுவாக நாம் நாவல் பழங்களை சாப்பிட்டு விட்டு அதன் விதைகளை குப்பைத் தொட்டியில் வீசுகிறோம், ஆனால் இதனால் நாம் நன்மைகளை இழக்க நேரிடும் என்பதை கேட்டால் ஆச்சர்யமாக உள்ளது இல்லையா. நாவல் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ஃபிளாவனாய்டுகள், துத்தநாகம், கால்சியம் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. ஆனால் இந்த பழத்தின் விதைகளில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உள்ளன என்பது பலருக்கு தெரியாது. இது நீரிழிவு அபாயத்தைக் குறைக்க உதவும் என்பது மிகச் சிலருக்குத் தெரியும். இந்த கெட்ட கொலஸ்ட்ராலின் அளவும் குறைகிறது.
இரத்த சர்க்கரை அளவு குறைவாக இருக்கும்
நாவல் பழ விதைகளில் ஜாம்போலின் மற்றும் ஜாம்போசின் என்ற கலவைகள் உள்ளன, அவை இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கின்றன, எனவே இது டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியத்தின் பொக்கிஷமாகும்.
நாவல் பழ விதைகளை சாப்பிடுவது எப்படி?
நாவல் பழத்தை சாப்பிட்ட பிறகு, அதன் விதைகளை பிரித்து, இப்போது அதை கழுவி, வெயிலில் நன்கு காய வைக்கவும். பின்னர் மேல் பகுதியை வெளியே எடுத்து பச்சையாக உள்ளே இருக்கும் பகுதியை வெளியே எடுக்கவும். உலர்ந்த விதைகளை மிக்சியில் பொடி செய்து காற்று புகாத கொள்கலனில் சேமிக்கவும். இதை தினமும் காலையில் இதனை சிறிதளவு தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், சில நாட்களில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Liver Detox: கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் மேஜிக் ட்ரிங்க்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ