Diabetes Control Tips: நீரிழிவு நோய், அதாவது இரத்தச் சர்க்கரை அதிகரிப்பு அல்லது குறைவால் ஏற்படும் பிரச்சனை இன்றைய உலகில் வேகமாக அதிகரித்து வருகிறது. இது ஒருவரை எப்போது தாக்கும் என்பது கூட அதிகமாக தெரிவதில்லை என்பதால், இதனை சைலன்ட் கில்லர் அதாவது அமைதியான கொலையாளி என்றும் அழைப்பதுண்டு. தவறான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால், அனைத்து வயதினரும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆபத்தான விஷயம் என்னவென்றால், ஒரு நபர் இந்த நோய்க்கு பலியாகிவிட்டால், அதை ஒருபோதும் முழுமையாக குணப்படுத்த முடியாது. இருப்பினும் மருந்துகள் மற்றும் நாம் கடைபிடிக்கும் ஒழுங்கான வாழ்க்கை மற்றும் உணவுமுறைகள் மூலம் இதை நிச்சயமாக கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உயர் இரத்த சர்க்கரையில் கொய்யா இலைகளின் நன்மைகள் (Benefits of Guava Leaves in High Blood Sugar):


கொய்யா இலைகள் சர்க்கரை நோய்க்கு அருமருந்து


நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஒரு இயற்கையான வழியை (Diabetes Control Remedies) பற்றி இந்த பதிவில் காணலாம். மருந்துகளை உட்கொள்ளும்போது ஏற்படும் பக்க விளைவுகளை போல இதை சாப்பிட்டால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் கொய்யா இலை தான் அந்த இயற்கையான வழி. அதிகப்படியான நன்மைகளை பெற இதை சரியான வழியில் மற்றும் நேரத்தில் உட்கொள்ள வேண்டும். இரவில் தூங்கும் முன் கொய்யா இலைகளை மென்று சாப்பிடுவது அளப்பரிய பலன்களை தருவதோடு, காலையில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் வரும்.


இந்த நேரத்தில் சாப்பிடுவது சிறந்தது


நீரிழிவு நோயாளிகள் எந்த நேரத்திலும் கொய்யா (Guava) இலைகளை உட்கொள்ளலாம், ஆனால் இரவில் அதை உட்கொள்வது மிகவும் நல்லது என்று கருதப்படுவதாக ஆயுர்வேத நிபுணர்களின் கூறுகிறார்கள். இதற்குக் காரணம், இரவில் கொய்யா இலைகள் உடலில் நன்றாகக் கரைந்து, அதனால் உடலில் அதிகரித்த இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். எனவே சர்க்கரை நோயாளிகள் இரவில் தான் இதை சாப்பிட வேண்டும்.


மேலும் படிக்க | ஜுஜூபி பழத்தை தமிழ்ல என்ன சொல்வாங்க தெரியுமா? ஊட்டச்சத்துக்களின் சுரங்கம் இலந்தை


இலைகளை மெல்லும் சரியான வழியை அறிந்து கொள்ளுங்கள்


கொய்யா இலைகளை (Guava Leaves) மெல்லும் முறையையும் கவனித்துக்கொள்வது மிகவும் அவசியம் ஆகும். இதற்கு, சிறிய மற்றும் பச்சை நிறத்தில் உள்ள நல்ல இலைகளைத் தேர்ந்தெடுக்கவும். 3-4 இலைகளை மட்டும் பறித்த பிறகு, அவற்றை தண்ணீரில் நன்கு கழுவவும். அதன் பிறகு, அவற்றை ஒவ்வொன்றாக மென்று சாப்பிடுங்கள். மெல்லும் போது, ​​இலைகளில் இருந்து சாறு வரும், அதை நீங்கள் குடிக்கலாம். மென்ற பிறகு, இலையின் மீதமுள்ள பகுதியை துப்பிவிட்டு வாயை கொப்பளிக்கவும். இதைச் செய்வதன் மூலம் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் பல நன்மைகள் கிடைக்கும். 


கூடுதல் தகவல்


கொய்யா


கொய்யா பலருக்கு பிடித்த ஒரு இனிமையான பழமாகும். இந்த பழம் ஆண்டு முழுவதும் கிடைத்தாலும், குளிர்கால வெயிலில் அமர்ந்து உண்பதில்தான் இதன் உண்மையான மகிழ்ச்சி அடங்கியுள்ளது. எளிதில் கிடைக்கும் இந்தப் பழத்தை ஏழைகளின் ஆப்பிள் என்றும் அழைப்பர். மக்கள் இதை காய்கறி, சட்னி மற்றும் சாலட் என பல வழிகளில் உட்கொள்கிறார்கள். கொய்யா சாப்பிடுவது குமட்டல் முதல் செரிமான பிரச்சனைகள் வரை அனைத்திற்கும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. 


கொய்யாவில் கலோரிகளின் அளவு மிகக் குறைவாக இருப்பதால், அதை உட்கொள்வதால் அதிக கலோரிகளைப் பெறுவது தவிர்க்கப்படுகின்றது. ஒரு கொய்யாவில் 37 முதல் 55 கலோரிகள் மட்டுமே உள்ளது. இது தவிர, கொய்யாவை உட்கொண்ட பிறகு ஒருவருக்கு நீண்ட நேரம் பசி ஏற்படாது. இதன் காரணமாக எடை இழப்பு உணவுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.


மேலும் படிக்க | தூக்கம் குறைஞ்சா ஹார்ட் பிராப்ளம் அதிகமாகும்! பெண்களை எச்சரிக்கும் ஸ்லீப்பிங் அலர்ட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ