நீரிழிவு நோய் கட்டுப்பாடு: நீரிழிவு நோய் என்பது தற்போது குணப்படுத்த முடியாத ஒரு நோயாக உள்ளது. இதனால் உலகம் முழுதும் பலர் பெரும் பிரச்சனைக்கு ஆளாகி வருகிறார்கள். பெரியவர்களை விட இளைய தலைமுறையினருக்கு நீரிழிவு நோய் ஆபத்தான நோயாக மாறியுள்ளது. இந்த நோய் பல ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் இருந்தால், உடலில் பல கடுமையான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீரிழிவு நோயில், மக்கள் தங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும், உண்ணும் உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பதும் உடலை சுறுசுறுப்பாக வைத்திருப்பதும் மிகவும் முக்கியமாகும். அன்றாட வாழ்வில் சில சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் இரத்த சர்க்கரையை எளிதில் கட்டுப்படுத்தலாம். நீரிழிவு நோயாளிகள் அன்றாட வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தினசரி உடற்பயிற்சி


தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம். தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தலாம். தினமும் உடற்பயிற்சி செய்தால் உடல் எடை குறைவது மட்டுமின்றி, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் இருக்கும்.


குறைந்த கார்போஹைட்ரேட் உட்கொள்ளல்


கார்போஹைட்ரேட் உணவு உங்கள் இரத்த சர்க்கரை அளவை பாதிக்கிறது. நமது உடல் கார்போஹைட்ரேட் உணவை குளுக்கோஸாக மாற்றுகிறது. இதன் காரணமாக நாம் எவ்வளவு கார்போஹைட்ரேட்டை உட்கொள்கிறோமோ, அவ்வளவு அதிகமாக இரத்த சர்க்கரை அளவு பாதிக்கப்படுகிறது.


நார்ச்சத்து நிறைந்த உணவு


நார்ச்சத்து நிறைந்த உணவு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. உடலால் நார்ச்சத்தை உறிஞ்சி உடைக்க முடியாது. இதன் காரணமாக உடலின் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காது.


மேலும் படிக்க | Fertility diet: கருவுறுதலை அதிகரிக்க உதவும் 5 உணவுகள்


அதிக தண்ணீர் 


இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த தண்ணீரும் உதவுகிறது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து போதுமான அளவு இருக்கிறது. இதன் காரணமாக இரத்தத்தில் உள்ள சர்க்கரை சிறுநீர் மூலம் உடலில் இருந்து வெளியேறுகிறது. தினமும் போதுமான அளவு தண்ணீர் உட்கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை எளிதில் கட்டுப்படுத்தலாம்.


சாப்பிட சரியான நேரம்


உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த விரும்பினால், சாப்பிடுவதற்கு சரியான நேரத்தை அமைத்துக்கொள்ளவும். காலை 9 மணிக்கு முன் காலை உணவு, மதியம் 1-2 மணிக்கிடையில் மதிய உணவு மற்றும் இரவு 8 மணிக்கு முன் இரவு உணவு என சரியான நெரத்தை வகுத்து அதில் உணவு உட்கொண்டால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கொலஸ்ட்ராலை குறைக்க வேண்டுமா? இந்த உணவுகளுக்கு 'நோ' சொல்லுங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ