நெய்யில் இருக்கு ஏகப்பட்ட நன்மைகள்: நீரிழிவு நோயாளிகள் நெய் சாப்பிடலாமா?
Diabetes Diet: நமது இந்திய சமையலில் நெய்க்கு முக்கிய இடம் உள்ளது. ஆனால், நீரிழிவு நோயாளிகள் நெய் சாப்பிடலாமா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு நெய் உண்மையில் நன்மை பயக்குமா?
நீரிழிவு நோயாளிகளுக்கு நெய்யின் நன்மைகள்: நீரிழிவு நோய் இன்றைய காலகட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நோய்களில் ஒன்றாக உள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயில், உடல் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியாது. சரியாகத் தவிர்க்கப்படாவிட்டால், இந்த நோய் பலருக்கு ஆபத்தானதாகக்கூடும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு சரியான உணவு மிக முக்கியமாகும். நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க சமச்சீர் உணவை உட்கொள்ள வேண்டும். நாம் அன்றாட உணவில் உட்கொள்ளும் பல உணவுப்பொருட்கள், நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனினும், சில உணவுகளை நீரிழிவு நோயாளிகள் உட்கொள்ளலாமா கூடாதா என்ற சந்தேகம் பலரிடம் இருப்பதுண்டு. அவற்றில் முக்கியமானது நெய்.
நமது இந்திய சமையலில் நெய்க்கு முக்கிய இடம் உள்ளது. ஆனால், நீரிழிவு நோயாளிகள் நெய் சாப்பிடலாமா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு நெய் உண்மையில் நன்மை பயக்குமா?
நீரிழிவு நோயாளிகள் பல உணவுப் பொருட்களிலிருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இருப்பினும், நெய் போன்ற சில உணவுப் பொருட்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நெய்யில் பால்மிடிக் அமிலம் மற்றும் ஒலிக் அமிலம் போன்ற கொழுப்பு அமிலங்கள் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். அவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ள உணவை உண்ண வேண்டும்.
கிளைசெமிக் குறியீட்டைக் குறைக்கிறது
உருளைக்கிழங்கு, அரிசி மற்றும் இனிப்பு பொருட்கள் அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன. இருப்பினும், இவற்றில் நெய் சேர்ப்பதால் அவற்றின் உயர் கிளைசெமிக் குறியீட்டைக் குறைக்கலாம். நெய்யை உட்கொள்வதால் குளுக்கோஸின் அளவு பாதிக்கப்படாது. ஆகையால், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த பயமும் கவலையும் இல்லாமல் நெய்யை உட்கொள்ளலாம்.
நெய் கொழுப்பு நிறைந்த உணவை ஜீரணிப்பதை எளிதாக்குகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். ஆனால் இங்கே நீங்கள் ஒரு விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். பசுவின் சுத்தமான பசும்பாலில் செய்யப்பட்ட நெய்யை மட்டுமே உட்கொள்ள வேண்டும், பதப்படுத்தப்பட்ட நெய்யைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் படிக்க | அழகை ரசிக்கறவங்க பாதாமை வேண்டான்னு சொல்வாங்களா? ஆரோக்கியத்திற்கும் பாதாம்
நெய்யால் நீரிழிவு நோயாளிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்:
- நெய் ஆரோக்கியமான கொழுப்பாக கருதப்படுகிறது. இது கரையக்கூடிய வைட்டமின்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
- நெய் வைட்டமின் கே மற்றும் பிற ஆண்டி-ஆக்சிடெண்டுகளின் நல்ல மூலமாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் தேவைப்படுகிறது.
- அதிக கார்போஹைட்ரேட் உணவுகளில் நெய்யைச் சேர்ப்பது கிளைசெமிக் குறியீட்டைக் குறைக்கிறது. இது மட்டுமின்றி, ரத்தத்தில் சர்க்கரையின் திடீர் அதிகரிப்பையும் நெய் தடுக்கும்.
- நெய் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது ஹார்மோன்களை நிர்வகிக்கவும் உதவுகிறது. இது தவிர, இன்சுலின் சுரப்பைக் கட்டுப்படுத்தவும் இது செயல்படுகிறது.
- நெய்யில் வைட்டமின் டி உள்ளது. இது கால்சியத்தை உறிஞ்சுவதற்கு மிகவும் முக்கியமானது. வைட்டமின் குறைபாடு டைப் 2 நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்.
மேலும் படிக்க | இந்த ஸ்பெஷல் மசாலாவை உட்கொள்வதால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ