Diabetes Home Remedies: இன்சுலினை இயற்கையாக அதிகரிக்க உதவும் பூண்டு!
பலர் நீரிழிவை கட்டுக்குள் வைத்திருக்க ஆயுர்வேத வழிமுறைகளை கடைபிடிக்கின்றனர். அத்தகைய ஒரு ஆயுர்வேத தீர்வை தருவதில், பூண்டு மிக சிறந்த தேர்வாக இருக்கும்.
நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உணவு விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பலர் நீரிழிவை கட்டுக்குள் வைத்திருக்க ஆயுர்வேத வழிமுறைகளை கடைபிடிக்கின்றனர். அத்தகைய ஒரு ஆயுர்வேத தீர்வை தருவதில், பூண்டு மிக சிறந்த தேர்வாக இருக்கும். இதன் மூலம் மிகச் சிறந்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம். அது மட்டுமின்றி, கொழுப்பை எரிக்கும் ஆற்றல் பூண்டிற்கு உண்டு. இன்னும் எண்ணற்ற நன்மைகள் இதில் உள்ளன. இந்நிலையில்,சர்க்கரை நோயாளிகளுக்கு பூண்டு எந்தவகையில் நன்மை பயக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்...
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பூண்டு
பூண்டு பூஜ்ஜிய கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவு. இதன் காரணமாக, உடலில் இன்சுலின் அளவு இயற்கையாக அதிகரித்து, சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். எனவே, இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள தீர்வைக் கொடுக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், நீரிழிவு நோயாளிகள் மருத்துவ குணங்கள் நிறைந்த பூண்டை தினமும் உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை எளிதில் சீராக்கலாம். சுமார் 100 கிராம் பூண்டில் 33 கலோரிகள், 6.6 கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின் பி6, வைட்டமின் சி, சோடியம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற நன்மை பயக்கும் அம்சங்கள் உள்ளன. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு ஒரு சஞ்சீவி (Health Tips) போன்றது.
பூண்டு நன்மைகள்
பூண்டு சுவைக்காக உணவுகளில் சேர்க்கப்படுகிறது என்றாலும், இதில் பலவித மருத்துவ நன்மைகளும் உள்ளது. ஜலதோஷம் மற்றும் காய்ச்சலுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது முதல், கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது, உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பது என பூண்டின் நன்மைகள் பற்றி பெரிய பட்டியலே போடலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி
வைட்டமின் சி பூண்டில் ஏராளமாக உள்ளதால், நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் அவசியமான நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகள் தங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். எனவே, பூண்டை உட்கொள்வதன் மூலம் கொழுப்பை எரித்து எடையைக் குறைக்கலாம். இது தவிர, நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீர் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பூண்டை உட்கொண்டால், அது தொற்றுநோயை ஏற்படுவதைத் தடுக்கும்.
மேலும் படிக்க | மூளையின் ஆற்றலை மேம்படுத்த... நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை!
உயர் இரத்த அழுத்தம்
நீரிழிவுடன் உயர் இரத்த அழுத்தமும் அதிகளவு இருந்தால் பக்கவாதம், மாரடைப்பு மற்றும் இதய செயலிழப்பு போன்றவை ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம். மேலும் இது சிறுநீரகத்தையும் பாதிக்கும். எனவே உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பூண்டு கை கொடுக்கும். உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் உணவில் பூண்டை சேர்த்துக் கொள்ளவதால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
பூண்டின் பிற ஆரோக்கிய நன்மைகள்
பூண்டில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால் புற்றுநோய், நீரிழிவு, அல்சைமர் மற்றும் இதய நோய் போன்ற நோய்களின் அபாயம் குறைகிறது. பூண்டில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த மூட்டு வலிக்கு தீர்வைக் கொடுக்கிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | எச்சரிக்கை! காலை உணவை மிஸ் பண்ணவே கூடாது... காரணங்கள் இதோ..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ