நீரிழிவை நிர்மூலமாக்கும் ‘சில’ இலைகள்... இதன் கஷாயம் ஒன்றே போதும்!
Best Leaves For Diabetic Control: சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லை என்றால், கண், சிறுநீரகம், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்படலாம். ஆனால், நீரிழிவை கட்டுக்குள் வைத்திருந்தால், ஆரோக்கியமான வாழ்க்கையை அனுபவிக்க முடியும்.
Best Leaves For Diabetic Control: சர்க்கரை நோய் இப்போது, பெரியவர்கள் மட்டுமல்ல இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. நீரிழிவு நோய் என்பது பல நோய்களைக் தன்னுடன் கொண்டு வரும் ஒரு நோயாகும். உடலை உள்ளே இருந்து பலவீனமாக மாற்றுவதைத் தவிர, இது உடலின் உள் உறுப்புகளையும் பாதிக்கிறது. குறிப்பாக, சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லை என்றால், கண், சிறுநீரகம், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்படலாம். ஆனால், இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருந்தால், நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை அனுபவிக்க முடியும்.
உங்கள் இரத்த சர்க்கரையை உங்களால் கட்டுப்படுத்த முடியாவிட்டால், அது சிறுநீரகத்திலிருந்து இதயம், சுறுநீரகம் தோல் முதல் கண்கள், சருமம் வரை அனைத்திலும், அதன் பாதிப்பை பார்க்கலாம். இந்நிலையில், நீரிழிவு நோய்க்கு எதிராக செயல்பட்டு, நீரிழிவை நிர்மூலமாக்கும் சில ஆயுர்வேத இலைகளின் பண்புகள் மற்றும் இரத்த சர்க்கரையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை இன்று அறிந்து கொள்ளலாம்.
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கும் சில இலைகள்
மா இலைகள்:
பெக்டின், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்த மாம்பழ இலைகள் உயர் இரத்த சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாது, அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கும் சிறந்ததாக கருதப்படுகிறது. மா இலைகளை தண்ணீரில் கொதிக்க வைக்கவும். இரவில் இந்த பானத்தை தயாரித்து, பின்னர் இந்த நீரை வடிகட்டி காலையில் குடிக்கவும்.
வேப்ப இலைகள்:
வேப்ப இலைகள் கசப்பானவை தான். ஆனால் அவை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். வேப்ப இலைகளை தவறாமல் உட்கொள்வது உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். மேலும், உயர் இரத்த அழுத்தம் அல்லது அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கும் இது நல்லது. தினமும் வேப்பிலை மற்றும் வேப்பம்பூ சேர்த்து கொதிக்க வைத்த நீரை உட்கொள்ளலாம் அல்லது 5-6 இலைகளை மென்று சாப்பிடலாம், ஆனால் அளவிற்கு அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
கறிவேப்பிலை :
நீரிழிவு நோயாளிகளுக்கு கறிவேப்பிலை பயனுள்ளதாக இருக்கும். கறிவேப்பிலையில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. நார்ச்சத்து செரிமானத்தை மெதுவாக்கி, ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. மேலும், இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. எனவே, தினமும் காலையில் சிறிது கறிவேப்பிலையை மென்று சாப்பிடுவது நல்லது. கறிவேப்பிலையை ஜூஸாக தயாரித்தும் குடிக்கலாம்.
வெந்தய கீரை:
வெந்தய கீரை ஆயுர்வேத பண்புகள் நிறைந்தவை, எனவே இவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. வெந்தய கீரை மட்டுமல்ல, வெந்தயம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க பெரிதும் உதவும். மேலும், இது குளுக்கோஸ் சகிப்புத்தன்மையை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது.
அஸ்வகந்தா இலைகள்:
அஸ்வகந்தா, இந்திய ஜின்ஸெங் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான மூலிகையாகும். இதன் இலைகள் நீரிழிவு நோய்க்கு எமனாக இருக்கும். குறிப்பாக, இது வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதை வேர் மற்றும் இலைகளை கஷாய வடிவில் பயன்படுத்தலாம். நீங்கள் அஸ்வகந்தா இலைகளை எளிதாக பயன்படுத்த, அவற்றை வெயிலில் உலர வைத்து, பொடியாக அரைக்கவும். பின்னர் சிறிதளவு பொடியை வெந்நீரில் கலந்து குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்குப் பலன் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ