சட்டுனு உடல் எடை குறைக்கணுமா? அப்போ இந்த 5 பருப்புகளை சாப்பிடுங்கள்

நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், முதலில் நீங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அதன்படி உடல் எடையை விரைவாகக் குறைக்க வேண்டுமானால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை முயற்சி செய்து பாருங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 13, 2024, 11:11 AM IST
  • பெரும்பாலான வீடுகளில் துவரம் பருப்பு தினமும் பயன்படுத்தப்படுகிறது.
  • அதிக புரதச்சத்துக்காக கடலைப் பருப்பை நாம் சாப்பிடலாம்.
  • உடல் எடையை குறைக்க வேண்டுமானால் தினமும் சிவப்பு மைசூர் பருப்பை சாப்பிடலாம்.
சட்டுனு உடல் எடை குறைக்கணுமா? அப்போ இந்த 5 பருப்புகளை சாப்பிடுங்கள் title=

Weight Loss Pulses : பருப்புகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் இவற்றில் அதிகளவு புரதம் காணப்படுகிறது. சைவ உணவு உண்பவர்களுக்கு, பருப்பு வகைகள் புரதத்திற்கு சிறந்ததாகக் கருதப்படுகிறது. பயோடெக்னாலஜி தகவலுக்கான தேசிய மையத்தின் படி, பருப்பு வகைகளில் அதிக அளவு புரதம் நிறைந்துள்ளதால், இவை உடல் எடையை விரைவாகக் குறைக்க (Dal For Weight Loss) உதவுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. உண்மையில், அதிக புரதத்தைத் தவிர, இந்த பருப்புகளில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகளவு காணப்படுகின்றன, அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். பருப்பு பல வகைகளில் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உணவில் குறிப்பாக இந்த 5 பருப்பு வகைகளைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் விரைவாக உடல் எடையைக் குறைக்கலாம்.

இந்த 5 பருப்பு வகைகள் உடல் எடையை குறைக்க உதவும் | 5 Pulses For Weight Loss:
 
1. துவரம் பருப்பு: 
பெரும்பாலான வீடுகளில் துவரம் பருப்பு தினமும் பயன்படுத்தப்படுகிறது. இதில் நிறைய புரத சத்து நிறைந்துள்ளது. புரதம் தவிர, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றையும் நிறைந்துள்ளது. இவை உடை எடையைக் குறைக்க உதவுவதோடு, துவரம் பருப்பில் உள்ள பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது.

2. கடலைப் பருப்பு:
அதிக புரதச்சத்துக்காக கடலைப் பருப்பை நாம் சாப்பிடலாம். இதில் புரத சத்து மட்டுமின்றி, நல்ல அளவு கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து உள்ளது. அதுமட்டுமின்றி இதில் துத்தநாகம் மற்றும் ஃபோலேட் ஆகியவைவும் காணப்படுகின்றன, அவை உடலை முழுமையாகக் கட்டமைக்கத் தேவையானவை. இந்த பருப்பு உடல் எடையை குறைக்க உதவும். ஏனெனில் இவற்றில் குறைந்த கொழுப்பு மற்றும் அதிக புரதம் உள்ளது.

மேலும் படிக்க | உடல் எடையை உடனே குறைக்க இந்த தவறுகளை கண்டிப்பா பண்ணாதீங்க

3. சிவப்பு மைசூர் பருப்பு:
உடல் எடையை குறைக்க வேண்டுமானால் தினமும் சிவப்பு மைசூர் பருப்பை சாப்பிடலாம். இது இன்னும் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இதில் குறைந்த கொழுப்பு மற்றும் அதிக நார்ச்சத்து நிறைந்துள்ளது, அதுமட்டுமின்றி இந்த பருப்பு உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதனுடன், செரிமானமும் மேம்பட உதவுகிறது. சிவப்பு மைசூர் பருப்பு சாப்பிடுவதால் கிளைசெமிக் கட்டுப்பாட்டில் இருக்கும். இதில் புரதம் மட்டுமின்றி நார்ச்சத்து, வைட்டமின் பி, வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை உள்ளன.

4.பாசிப் பயறு:
பாசிப்பயிறு சாப்பிட்டால் உடல் எடையை விரைவில் குறைக்கலாம். ஒரு கிண்ணம் பாசிப் பயிறு வெறும் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கு உதவும், இதனால் அதிகமாக சாப்பிடுவதை தடுக்கலாம். அதுமாடுமின்றி இதில் அதிக அளவு புரதம் உள்ளது, இதை தவிர, வைட்டமின்-பி2, பி3, பி5, பி6, நார்ச்சத்து, ஃபோலேட், மாங்கனீஸ், மெக்னீசியம், வைட்டமின்-பி1, பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், செலினியம் போன்ற சத்துக்களும் இந்த பருப்பில் நிறைந்துள்ளது.

5. உளுத்தம் பருப்பு:
தோசை, இட்லி போன்ற உணவுகளில் உளுத்தம் பருப்பு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த பருப்பை கிச்சடி வடிவில் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் எடையை வேகமாக குறைக்க முடியும். உளுத்தம் பருப்பில் புரதம் மட்டுமின்றி கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, பல வகையான வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் போன்றவையும் நிறைந்துள்ளது.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | அடிக்கடி முகப்பரு வருகிறதா? அப்போ இந்த பொருளை பயன்படுத்துங்கள் போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News