சிறுநீரகம், நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நீரழிவு... சில அறிகுறிகளும் பாதிப்புகளும்...!
நீரழிவு நோய் என்பது, நமது வாழ்க்கை முறை சார்ந்த ஒரு நோய். இது குணப்படுத்த முடியாது. கட்டுப்படுத்த மட்டுமே முடியும். இதற்கு நேரடி மருந்துகள் எதுவும் இல்லை என்றாலும், இதனை கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் நோயைத் தவிர்த்து ஆரோக்கியமாக வாழலாம்.
நீரழிவு நோய் என்பது, நமது வாழ்க்கை முறை சார்ந்த ஒரு நோய். இது குணப்படுத்த முடியாது. கட்டுப்படுத்த மட்டுமே முடியும். இதற்கு நேரடி மருந்துகள் எதுவும் இல்லை என்றாலும், இதனை கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் நோயைத் தவிர்த்து ஆரோக்கியமாக வாழலாம். குறிப்பாக நீரழிவு நோயின் ஆரம்பகால அறிகுறிகளை நாம் கவனத்தில் கொண்டால், சரியான நேரத்தில் அதனை கண்டறிந்து, அதனால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கலாம்.
நீரழிவு நோயின் அறிகுறிகள்
நீரழிவு நோய் பாதிப்பு இருந்தால், அதாவது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் அதிக தாக உணர்வு இருக்கும். அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அதோடு உடலில் சோர்வு, கண் பார்வை மங்குதல், காரணம் இன்றி உடல் எடை குறைதல், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு போன்றவை தோன்ற ஆரம்பிக்கலாம். இவை இருந்தால் ரத்த சர்க்கரை அளவை (Health Tips) உடனே செய்து பார்க்க வேண்டும்.
நீரழிவு நோய்
நீரிழிவு நோயில் இரண்டு வகைகள் உள்ளன. டைப் 1 மற்றும் டைப் 2 நீரழிவு. கணையம் இன்சுலின் உற்பத்தி செய்யும் திறன் பாதிக்கப்படுவதால் நீரழிவு நோய் உண்டாகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து அதன் அறிகுறிகளையும், பாதிப்புகளையும், நாம் உடலில் பல்வேறு விதங்களில் காணலாம்.
கண் பார்வை பாதிப்பு
ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால், விழித்திரையில் உள்ள ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு, கண் சம்பந்தமான பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும். முக்கியமாக கண் புரை, மங்கலான பார்வை, கிளாக்கோமா, ரெட்டினோபதி போன்ற பாதிப்புகள் உண்டாகும். கண்பார்வை பிரச்சனைகள் இருந்தால், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை செய்வது நல்லது.
பாதங்களில் கூச்ச உணர்வு
நீரழிவு நோயின் மற்றொரு தாக்கம், பாதங்களில் தோன்றும் கூச்ச உணர்வாகும். இதற்கு காரணம் கால்களுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைவாக இருப்பது தான். அதனால்தான் கால்களில் காயம் ஏற்பட்டால் சீக்கிரம் குணமாகாமல் கூட இருக்கும். அதனால் பாதங்களில் கூச்ச உணர்வு இருந்தாலோ, காயங்கள் சீக்கிரம் ஆறவில்லை என்றாலும், மருத்துவரை கலந்த ஆலோசிக்கவும்.
ஈறுகளில் பாதிப்பு
நீரிழிவு நோய் அறிகுறிகளை ஈறுகளிலும் காணலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லாமல் இருந்தால், நரம்புகளில் ஏற்படும் அடைப்பு, ரத்தம் தடித்தல் ஆகியவை இதற்கு காரணம். நரம்புகளில் உண்டாகும் அடைப்பினால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, ஈறுகளை சுற்றி உள்ள தசைகள் வலுவை இழக்கும். இதனால் பாக்டீரியா போன்ற தாக்கமும் அதிகமாக இருக்கும். எனவே ஈறுகளில் பிரச்சனை இருந்தால், அதற்கு சிகிச்சை எடுப்பதுடன் கூடவே ரத்தத்தையும் பரிசோதனை செய்ய வேண்டும்.
சிறுநீரக பாதிப்பு
இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லாமல் இருந்தால், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும் முன்னரே கண்டோம். சிறுநீரகத்தில் இருக்கும் சிறிய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட, சர்க்கரை காரணம் ஆகிறது. சிறுநீரில் புரதச்சத்து அதிகரித்து, கால்கள், கணுக்கால், கைகள் மற்றும் கண்களில் வீக்கம் தோன்றலாம். அடிக்கடி குமட்டல் வாந்தி சோர்வு ஆகியவையும் ஏற்படலாம்.
இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் நீரிழிவு
நீரழிவு நோய் கட்டுக்குள் இல்லாமல் இருந்தால் இதய நரம்புகளும் பாதிக்கப்படுகின்றன. இதனால் மாரடைப்பு பக்கவாதம் போன்ற ஆபத்துகளும் அதிகரிக்கிறது.
நரம்புகளில் ஏற்படும் பாதிப்பு
உயர் ரத்த சர்க்கரை அளவு நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது நரம்புகளில் உணர்வின்மை, அதிக வலி உணர்வு, மற்றும் பிடிப்புகள் ஆகியவை அனைத்தும் நீரிழிவு நோயின் பாதிப்புகள் மற்றும் அறிகுறிகள் ஆகும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ