Live : பட்ஜெட் 2025, புயல் எச்சரிக்கை, இந்தியா - ஆஸி முதல் டெஸ்ட், அதானி விவகாரம், ராகுல்காந்தி பேட்டி உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்

Tamilnadu Live News Today : தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும், புயல் எச்சரிக்கை, இந்தியா - ஆஸி முதல் டெஸ்ட், அதானி விவகாரம், ராகுல்காந்தி பேட்டி உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள். 

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 22, 2024, 05:00 PM IST
    தமிழ்நாடு இன்றைய முக்கிய செய்திகளின் லைவ் அப்டேட்ஸ்
Live Blog

Tamilnadu Today Live News : தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணி பேட்டிங் செய்கிறது. அதானி மீது அமெரிக்க நீதிமன்றம் லஞ்ச புகார் சுமத்தி, பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனால் அதானியை கைது செய்து விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி காட்டமாக பேட்டியளித்துள்ளார். அதானி நிறுவனத்துடன் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு எந்த புதிய ஒப்பந்தமும் போடப்படவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இதுதவிர இன்றைய நாளின் மிக முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே நேரலையாக காணலாம். 

22 November, 2024

  • 12:39 PM

    இந்தியா ஆல்அவுட்

    ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆல்அவுட். இந்திய அணியில் அதிகபட்சமாக நிதீஷ் ரெட்டி 41 ரன்களும், ரிஷப் பந்த் 37 ரன்களும் எடுத்தனர்

  • 09:10 AM

    விராட் கோலி அவுட்

    ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 5 ரன்களில் அவுட். இந்திய அணி 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

  • 08:19 AM

    ஜெய்ஷ்வால் டக்அவுட்

    பார்டர் கவாஸ்கர் டிராபி போட்டியில் இந்திய அணி முதல் பேட்டிங். ஓப்பனிங் இறங்கிய ஜெய்ஷ்வால் டக்அவுட்டாகி வெளியேறினார்

Trending News